[16/07, 20:19] sekarreporter1: [16/07, 20:16] sekarreporter1: https://youtu.be/KoW51G6SlDY?si=rMi8VibnMYRwS2N2[16/07, 20:17] sekarreporter1: இறைவன் யிட்ட பணி செவ்வனே செய்வேன் உருக்கமான பேச்சு[17/07, 08:34] sekarreporter1: நீதிபதி பதவியை, பதவியாக நினைக்காமல், எனக்கிடப்பட்ட பணியாகக் கருதி தொடர்ந்திருக்கிறேன் என, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி மகாதேவன் தனது பணிக்காலத்தில், 97 ஆயிரத்து 116 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், நீதிபதி மகாதேவன் ஆற்றிய ஏற்புரையில், வாழ்க்கை பயணத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழ்வதுண்டு. இந்த பயணத்தில் அப்படியான நிகழ்வு இந்த நாள் எனக் குறிப்பிட்டார். தேவைகள் இல்லாமல இந்த கட்டிடத்தில் துவங்கிய பயணத்தில் 2013 ல் நீதிபதியானதாகவும், அது இறைவனின் செயல் எனவும் கூறினார்.

ஒரு நீதிபதியாக 10 ஆண்டுகள் கடந்து பணியாற்றிய நிலையில் மனதளவில் எவரையும் புண்படுத்தியதாக நினைவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், இளைய வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் ஒன்றாகவே பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி பதவியை, பதவி என நினைக்காமல் இடப்பட்ட பணியாக கருதி தொடர்ந்திருப்பதாகக் கூறிய அவர், தனது பணி, இறைவன் ஆணையிட்ட பணி எனக் கூறினார்.

[16/07, 20:19] sekarreporter1: [16/07, 20:16] sekarreporter1: https://youtu.be/KoW51G6SlDY?si=rMi8VibnMYRwS2N2
[16/07, 20:17] sekarreporter1: இறைவன் யிட்ட பணி செவ்வனே செய்வேன் உருக்கமான பேச்சு
[17/07, 08:34] sekarreporter1: நீதிபதி பதவியை, பதவியாக நினைக்காமல், எனக்கிடப்பட்ட பணியாகக் கருதி தொடர்ந்திருக்கிறேன் என, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி மகாதேவன் தனது பணிக்காலத்தில், 97 ஆயிரத்து 116 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், நீதிபதி மகாதேவன் ஆற்றிய ஏற்புரையில், வாழ்க்கை பயணத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழ்வதுண்டு. இந்த பயணத்தில் அப்படியான நிகழ்வு இந்த நாள் எனக் குறிப்பிட்டார். தேவைகள் இல்லாமல இந்த கட்டிடத்தில் துவங்கிய பயணத்தில் 2013 ல் நீதிபதியானதாகவும், அது இறைவனின் செயல் எனவும் கூறினார்.

ஒரு நீதிபதியாக 10 ஆண்டுகள் கடந்து பணியாற்றிய நிலையில் மனதளவில் எவரையும் புண்படுத்தியதாக நினைவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், இளைய வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் ஒன்றாகவே பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி பதவியை, பதவி என நினைக்காமல் இடப்பட்ட பணியாக கருதி தொடர்ந்திருப்பதாகக் கூறிய அவர், தனது பணி, இறைவன் ஆணையிட்ட பணி எனக் கூறினார்.

You may also like...