17/04, 06:45] sekarreporter1: https://youtu.be/FQSVotzVr2E?si=6t6TUqW0Nrj7qO-D[17/04, 06:45] sekarreporter1: 2024 ம் ஆண்டுக்கான எழுத்தாளர்மா. அரங்கநாதன் இலக்கிய விருதுபேராசிரியா் தெ.ஞானசுந்தரம், முனைவர்.கு.வெ.பாலசுப்ரமணியன் ஆகியோருக்குசென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன்வழங்கினார்.

[17/04, 06:45] sekarreporter1: https://youtu.be/FQSVotzVr2E?si=6t6TUqW0Nrj7qO-D
[17/04, 06:45] sekarreporter1: 2024 ம் ஆண்டுக்கான எழுத்தாளர்
மா. அரங்கநாதன் இலக்கிய விருது
பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், முனைவர்.கு.வெ.பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன்
வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன்
தந்தையும், மறைந்த
எழுத்தாளருமான மா. அரங்கநாதனின் நினைவையொட்டி ஆண்டுதோறும் ஏப். 16- ஆம் தேதி மா. அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவா்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு மற்றும் படைப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை, அண்ணா சாலை ராணி சீதை அரங்கத்தில் மா. அரங்கநாதன் இலக்கிய விருது விழா நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் பேராசிரியருமான தெ.ஞானசுந்தரம், எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது – 2024’ வழங்கப்பட்டது..

தொடா்ந்து, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’, ‘பொருளின் பொருள் கவிதை’ ஆகிய நூல்களை நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட்டார்..

இவ்விழாவில், திருவானைக்கா ஓதுவாா் ரமணி சீனிவாசன், சிறுகதை எழுத்தாளா் அகரமுதல்வன், ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன், கவிஞா் எஸ்.சண்முகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் பங்கேற்றிருந்தனா்.

You may also like...