19, 08:14] Kumara Devan: ….வரலாற்றில் இன்று … திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லாத மூத்த தமிழினப் போராளி இனமானப்

[12/19, 08:14] Kumara Devan: ….வரலாற்றில் இன்று …

திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லாத மூத்த
தமிழினப் போராளி இனமானப்
பேராசிரியப் பெருந்தகை க.அன்பழகனாரின் நூற்றாண்டு தொடக்க நாள்
(டிசம்பர் 19)
…சு.குமார தேவன் ….
🎁🎈🎉🌹🌹🌻🌺💐💐
* திராவிடர் இயக்கத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க படித்தப் பட்டதாரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பலர் உருவாகி 1940 களில் தந்தை பெரியார் பின்பு அணிவகுத்தனர். அவர்களில் நாவலர் நெடுஞ்செழியன், இரா.செழியன், புலவர் மா. நன்னன், பேராசிரியர் அன்பழகன் முக்கியமானவர்கள்.

* பேராசிரியர் க.அன்பழகனாரின் இயற்பெயர் இராமையா. தற்போதைய திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நீதிக் கட்சிப் பிரமுகர் கல்யாண சுந்தரனார் – சுவர்ணம்பாள் தம்பதியர்க்கு பிறந்தார். நாவலர் நெடுஞ்செழியனுக்கு 2 வயது இளையவர், கலைஞருக்கு 2 வயது மூத்தவர். வடமொழியிலமைந்த பெயர்களை மாற்றும் இயக்கத்தின் விளைவாக இராமையா, அன்பழகனானார்.

* சற்றே திக்கித் திக்கிப் பேசிய நாவலர் நெடுஞ்செழியனுக்கு உரிய பயிற்சி அளித்துப் பெரிய பேச்சாளராக வலம் வர வழிவகுத்தார். இது பற்றி நாவலர்
” வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் ” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

* பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி திராவிட இயக்கத்தில் பங்கு கொண்டார். அண்ணாவின் அன்பை இளம் வயதில் பெற்றதால் சென்னை வந்தால் பேராசிரியர் வீட்டில் தான் அறிஞர் அண்ணா தங்குவார்.

*நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க.போன்ற
இயக்கங்கள் தங்கள் கொள்கை பரப்ப 257 இதழ்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டன
நமது பேராசிரியரும்
“புது வாழ்வு” என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

* இலக்கியம், வகுப்புரிமை, சமுதாயம், சமய மறுப்பு, வள்ளுவம்,பகுத்தறிவு, திராவிட இயக்கம் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும், ஆதாரத்துடன், ஆழமாக . அமைதியாக எதிர்க்கருத்து கொண்டோரும் வியக்கும் வண்ணம் திறம்பட உரையாற்றுவதில் வல்லவர்.

* புலவர் குழந்தையின்
“இராவண காவியம் “1948ல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாத புது வாழ்வு இதழில் அது பற்றி எழுதிய சிறு கட்டுரையை இன்று வாசித்தாலும், அவரது வாதத்தில் உள்ள நியாயம் தெளிவாகப் புலப்படும்.

* “நீங்களும் பேச்சாளராகலாம்” என்ற நூல் இளம் தலைமுறைப் பேச்சாளர்களுக்கு நல்ல வழி காட்டியாக அமைந்த நூல்.வகுப்புரிமைப் போராட்டம் என்ற நூல் இட ஒதுக்கீட்டு வரலாற்றை புள்ளி விவரத்தோடு எடுத்தியம்பும் நூல்.இப்படி பல நூல்கள் படைத்த பேராசிரியர் தனது பேச்சுக்களைத் தொகுத்து அவற்றையும் நூல்களாக்கியுள்ளார்

*இனமானம் குறித்து அவர் பேச்சில் அதிகம் இருக்கும். அதுவே அவருக்கு
” இனமானப் பேராசிரியர் ” என்ற பட்டம் தோழர்களால் அளிக்கப்பட்டக் காரணமாக அமைந்தது.

* பெரியாரின் மாணவரான பேராசிரியர், பெரியார் கண்ட திராவிடர் கழகத்துக்கும், ஆசிரியர் வீரமணிக்கும் இறுதி வரை உறுதுணையாய் இருந்தார். தன் இறுதிக் காலம் வரை பெரியார் திடலில் பேசுவதைப் பெருமையாகவும், கடமையாகவும் கருதினார். பேராசிரியர்கள் A.R.ஜனகன் மற்றும் ந.க.மங்கள முருகேசன் தொகுத்து வெளியிட்ட பேராசியரின் வாழ்க்கை வரலாற்று நூலினை பெரியார் திடலில் டாக்டர் கலைஞர் வெளியிட்டார். அந்த நிகழ்வுதான் கலைஞர் இறுதியாகப் பெரியார் திடல் வந்தது. அது போல் பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய நீதிக் கட்சி நூற்றாண்டு விழாவில் பேராசிரியர் கலந்து கொண்டு பேசியதும் அங்கு தான். பேராசிரியரின் நூல்களான “இவர்தாம் பெரியார், வாழ்க திராவிடம், திராவிடர் இயக்கத்தின் தோற்றமும், தேவையும், தொண்டா துவேஷமா, வளரும் கிளர்ச்சி, வகுப்புரிமைப் போராட்டம்” போன்ற நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு பல பதிப்புகள் கண்டு இன்றும் விற்பனையாகிக் கொண்டுள்ளது.

* நிறைகுடம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கிய அவர் ஒரு தலைப்பில் பேச ஆரம்பித்தால் அருவி போல் வந்து விழும் கருத்துக்கள், சொற்றொடர்கள், மேற்கோள்கள், குறள்கள், இலக்கிய உவமைகள் அவர் ஆராய்ச்சிக்கு ஓர் உதாரணம்.

* இயக்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கட்டுப்பாடு, பேச்சில் கண்ணியம், இயக்கத்திற்கு கடமையாற்றுதல் என்று அண்ணாவின் அடிபிறழாமல் வாழ்பவர்.

* பல ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று பல பதவியில் இருந்தாலும் பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி, கலைஞரின் நண்பர் என்பதையே பெருமையாகக் கருதுபவர். சட்டப்பேரவையில் ஆழமாக, ஆதாரங்களுடன் அழுத்தமாக உரையாற்றுவது அவர் பாணி. தங்கு தடையற்ற தெளிவான பேச்சு அடை மழையாய் வந்து விழுகிறது என்றால் அது பேராசிரியர் பேச்சு தான்.

* பயம் என்பது ஒரு சிறிதும் அறியாதவர் பேராசிரியர். அதற்கு அவர் சொல்லும் காரணம் பெரியார் என்கின்ற மாமனிதர் அளித்த கயமரியாதைத் தத்துவம் என்பார்.

* பல முறை MGR அதிமுகவில் சேர வேண்டும் என்று பேராசிரியருக்கு மறைமுகமாகவும், நேரிலும் அழைப்பு விடுத்தும் அதை ஒரேயடியாக மறுத்து
” கலைஞர் தான் என் தலைவர் “அவர் இல்லையேல் தி.மு.க. இல்லை என்று இறுதி வரை வாழ்ந்தார். அரசியலில் புத்தனாய் வாழ்ந்து பலருக்கு திராவிட இயக்கம் கொள்கைக் கலங்கரை விளக்கமாய் விளங்கினார்.

* இளைஞர்களை ஊக்கப்படுத்துவதில் பேராசிரியருக்கு நிகர் அவரே. அதற்கு ஒரே உதாரணம் திமுக இளைஞர் அணியும், தளபதி மு.க.ஸ்டாலினும். இளைஞரணியை நெறிப்படுத்தி சரியான திசை நோக்கிப் பயணிக்கக் செய்த பெருமை பேராசியரையே சேரும்.

* பகுத்தறிவாளர்கள், இறை மறுப்பாளர்கள் பல்லாண்டுகள் வாழ்வார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் நம் பேராசிரியர் தான். தன் 98ம் ஆண்டு வரை நல்ல நினைவோடு திராவிட இயக்க சிந்தனைகள் நெஞ்சில் நிழலாட வாழ்ந்து மறைந்தார்.

*பேராசிரியர் நூற்றாண்டு தொடக்க விழாவில் அவரது எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்படுவது கூடுதல் சிறப்பும் அவருக்குப் பெருமையும் ஆகும். அதே சமயம் அவரது படைப்புகளை யாரும் திரித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல்வர் தளபதி அவர்கள் இதில் முனைப்பு காட்ட வேண்டும். பேராசிரியர் புகழ் வாழ்க வாழ்க என்று முழங்கும் வாழ்த்தொலியில் நாமும் இணைந்து வாழ்த்திடுவோம்.
[12/19, 08:15] Sekarreporter 1: 🙏🏼

You may also like...