2 dmk minister விடுதலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு விடுவித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு.

 

நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை..

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக15-05-2006 முதல் 31-03-2010 வரையிலான காலத்தில் 76,40,443 சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு அவரின் மனைவி மணிமேகலை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13 விசாரித்த உத்தரவிட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

 

கடந்த 2006 -2011-இல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 44,59,067 மதிப்பிலான சொத்துகளை 01-04-2006 முதல் 31-03-2010 வரையிலான கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திர ன் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை தாக்கல் செய்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மனு தாக்கல் செய்தாா்.

அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தாக்கல் செய்த 28 வருவாய் விவரங்கள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்டனா்.

 

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தாக்கல் செய்த விசாரித்த கடந்த ஜூலை 20 தேதி விசாரித்து உத்தரவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிபதி திலகம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை இதுவரை மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் எம்.பி எல்.எல்.ஏ களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு  முதல் வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...