[8/21, 14:11] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1693543718903791934?t=33GM8sbsfChLo931cVmqqg&s=08 [8/21, 14:11] sekarreporter1: அந்த ஃபேன் காத்துல தூங்கினேம்ப்பா… கொசுவே வர்ல…ரொம்ப தேங்க்ஸ்பா’’ என்று வெள்ளந்தியாக சிரித்து ஒரு சலாம் போட்டார், அந்த முதியவர் . ‘‘புரபஷருக்குத்தான் நன்றி சொல்லணும்…’’ என்றபடி கிளம்பினேன். [8/21, 13:11] Sethu Sir Dinamalar: அந்த மனசுதான் “சாமி…” * sekarreporter1: super

[

 

8/21, 13:08] Sethu Sir Dinamalar: அந்த மனசுதான் “சாமி…”
*
காற்று, மனமிறங்காத, வறண்ட வானிலை கொண்ட ஓர் கோடை இரவு. அந்த முதியவர் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்ததை பார்த்தேன். அருகில் உள்ளங்கை அளவில் ஒரு மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது.

அவர்தான் அந்த அபார்ட்மென்ட் காவலாளியும்கூட.

‘‘ஒரே புழுக்கம். தூக்கம் வராம புரண்டுகிட்டு இருக்கார். வேறொன்னும் இல்ல. நீ போப்பா…’’ முதியவரின் மனைவி.

‘‘என் வீட்டில் இருக்கும் மின்விசிறியை எடுத்துக்கொள்ளுங்களேன்’’

நான் என்ன சொல்லியும் அவர் மனைவி மறுத்துவிட்டார்.

‘‘எங்களுக்கு இப்படியே பழகிடுச்சுப்பா. இன்னும் கொஞ்ச நேரத்தில, இதோ இந்த வேப்ப மரத்தில இருந்து குபு குபுன்னு காத்து அடிக்கும். அப்டியே தூங்கிடுவோம்…’’ என்று கூறி கலகலவென சிரித்தார்.

நள்ளிரவு தாண்டியது. காற்றுக்காக காத்திருந்தேன்…

அவர்கள் இருவரும் தூங்கிவிட்டது தெரிந்தது. எனக்குத்தான் தூக்கம் வரவில்லை.
*
நடைபாதைகளில், நம் அருகில், கால்வாய் ஓரங்களில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், கடற்கரைகளில், எந்த விரிப்பும், எந்த வசதிகளும் இன்றி எத்தனை மனிதர்கள் ஓர் இரவை கழிக்கிறார்கள்.

*
உறக்கம்தான், மனித வாழ்வின் அர்த்தம்.
யாருக்கும் கெடுதல் செய்யாமல், கேடு நினைக்காமல் தூய மனதோடு உறங்கசென்றால், மயிலிறகுபோல் உறக்கம் தழுவும்.

விடிந்தால்தானே மறுநாள் வாழ்க்கை.

உறக்கம்தான் இன்னொரு நாளுக்கான வாய்ப்பை தருகிறது.
*
மரங்களில் எந்த அசைவுமில்லை. காற்று வீசும் அறிகுறியும் இல்லை.
ஒருவழியாக, அதிகாலை 3.00 மணியளவில், மரக்கிளைகளின் சலசலப்பு தொடங்கியது. மனம் பரபரக்க, பால்கனி திறந்துபார்த்தேன். குபீரென காற்று முகத்தில் மோதி, மனதை மகிழ்வித்தது.
*
ஏழைகளை தூங்கவைக்க வந்திருக்கும் ‘‘காற்றே வருக! வருக!!’’ என்றபடி மனதின் புழுக்கம் மறைந்து, மகிழ்ச்சியோடு தூங்க சென்றேன்.
*
இந்தப்பதிவை நண்பர்களுக்கு பகிர்ந்திருந்தேன்.
*
‘‘உங்க பதிவை படித்ததும், மனது என்னவோ செய்தது சார். அந்த முதியவர்களுக்கு, மின்விசிறி வாங்கி தர விரும்புகிறேன். என் பெற்றோருக்கு செய்வதுபோல நினைக்கிறேன். கொஞ்சம் அவங்கள்ட்ட கேட்டு சொல்லமுடியுமா?’’ என்ற வாட்ஸ்அப் தகவல் வந்தது.

லயோலா கல்லூரியின், கௌஷல் கேந்திரா துறையின் இயக்குநர், கே.எஸ்.அந்தோணி சாமி அனுப்பி இருந்தார்.

குடும்பம், சமூகம் போன்ற கருத்துகளில், கிட்டதட்ட எங்கள் இருவர் சிந்தனைகளும் ஒரே பாதையில் பயணிக்கும்.
அவரது மெசேஜ் பார்த்தும் பரவசமானேன்.

*
‘‘பேராசிரியர் நண்பர் ஒருவர், உங்களுக்கு மின்விசிறி வாங்கி தரணும்னு விரும்புகிறார். வாங்கிக்கிறீங்களா?’’ என்றதும், இந்தமுறை அந்த பெரியவர் மறுத்தார்.
‘‘வேணாம்ப்பா. நமக்கு எதுக்கு அதெல்லாம். வேணாம்னு சொல்லிடுப்பா…’’ என்றார்.

*
திருவண்ணாமலை அருகே ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். எலக்ட்ரிஷியன். பிளம்பர் பணிகள் செய்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக, காவலாளி பணிக்கு வந்துவிட்டார்.
சில நாள் கழித்து, மீண்டும் புரபஷரிடம் இருந்து மெசேஜ்.

மறுபடியும் பெரியவரிடம் பேசினேன். ‘‘சரி, என்னமோ பண்ணிக்கப்பா…’’ என்றார்.

இந்தமுறை, புரபஷர், பரவசமானார்.

‘‘சரியா காலை 11.00 மணிக்கு நான் மாம்பலம் ராஜூ எலக்ட்ரிக்கல்ஸ் வந்துடுறேன். நீங்களும் வாங்க. நல்ல ஃபேனா பாத்து வாங்கி கொடுத்துருவோம்…’’ என்றார்.

பலநாள் இழுபறிக்குப்பின்னர், ஒருநாள் இருவரும், எலக்ட்ரிகல்ஸ் கடையில் நின்றோம்.

‘‘இந்த ஃபேன், ஹைஸ்பீடு. ஆனா சத்தம் அதிகம் வரும்…’’ – கடைக்காரர்.

‘‘ஒரு முதியவர் பயன்படுத்தப்போறார். நல்லா காத்து வரணும். சத்தம் அதிகம் வரக்கூடாது. அதுபோல பாத்துக்கங்க…’’ -புரபஷர்.
‘‘இது லேட்டஸ்ட். நீங்க கேக்கிற மாதிரி இருக்கும்…’’
கடைக்காரர் டெமோ காட்டிய அந்த டேபிள் ஃபேனில் இருந்து புறப்பட்ட காற்று, சில்லென்ற நெஞ்சில் மோதியது.

‘‘சார், அப்படியே கொஞ்சம் ஆப்பிள், வாழைப்பழம்லாம் வாங்கிக்கிவோம்…’’ – பழக்கடை பக்கம் இழுத்திட்டு போனார் புரபஷர்.

அந்த முதியவர், அவர் மனைவியை என் வீட்டுக்கு அழைத்து, புரபஷர் கைகளால், மின்விசிறியை வழங்க செய்தேன்.
இருவரும் வெட்கத்தால் சிவந்தார்கள்.

அவர்களை வழியனுப்பியபின்னும் புரபஷர் முகம் வாடியிருந்தது.

‘‘கோடை காலமே போயிடுச்சு. இன்னும் கொஞ்சம் முன்னாடியே வாங்கி கொடுத்திருந்தா, அவங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் சார். லேட் பண்ணிட்டேன்….’’

அந்த மனசுதான் கே.எஸ்.அந்தோணி சாமி – என நினைத்துக்கொண்டேன்.

‘‘அந்த ஃபேன் காத்துல தூங்கினேம்ப்பா… கொசுவே வர்ல…ரொம்ப தேங்க்ஸ்பா’’ என்று வெள்ளந்தியாக சிரித்து ஒரு சலாம் போட்டார், அந்த முதியவர் .
‘‘புரபஷருக்குத்தான் நன்றி சொல்லணும்…’’ என்றபடி கிளம்பினேன்.
[8/21, 13:11] sekarreporter1: super sir

You may also like...