Sethu Sir Dinamalar: *”குரு” வெங்கடேசனும்* *”குருவி” ஃபேனும் …* * அந்த பெரியவரின் பெயர் வெங்கடேசன்.

[6/5, 06:52] sekarreporter1: [6/5, 02:12] Sethu Sir Dinamalar: *”குரு” வெங்கடேசனும்*
*”குருவி” ஃபேனும் …*
*
அந்த பெரியவரின் பெயர் வெங்கடேசன்.

மே மாதம், வெயில் உக்கிரம் கொண்ட ஓர் இரவில், தூக்கம் இன்றி தவித்த அவர் நிலை உணர்ந்து, எனது வீட்டில் இருந்த ஸ்டான்ட் ஃபேன் பயன்படுத்திக் கொள்ள கேட்டு கொண்டும், அவரும், அவர் மனைவியும் ஏற்று கொள்ளவில்லை.

அவர் தலைமாட்டில் குருவி சைசுக்கு சுற்றி கொண்டிருந்த சிறு ஃபேன் போதும் என்று மறுத்துவிட்டார்கள்.

“அட, இன்னும் கொஞ்ச நேரத்தில வேப்ப மர காத்து, சிலு சிலுண்ணு அடிக்கும். அது போதுங்கையா.. நாம, அப்படியே தூங்கிடுவோம்…” அலட்டி கொள்ளாமல், முதியவரின் மனைவி தூங்க சென்று விட்டார்.

எனக்கு உறக்கமில்லா, இரவானது அது.

அதிகாலை மூன்று மணி வாக்கில், வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரம் அசைந்தது. பூங்காற்று புறப்பட்டது.

அதன் பிறகே என் மன புழுக்கம் குறைந்தது.

ஏழைகள் வாக்கு பொய்ப்பதில்லை.

நெஞ்சை பிசைந்த அந்த நினைவுகளை,
“பூங்காற்று புதிரானது”
என்று பகிர்ந்திருந்தேன்.

சில நாட்கள் முன்பு, என் வாட்ஸ்அப் இல் ஒரு குறுஞ்செய்தி:

“Touching. Moved by the simplicity and yathartham of common people.
Willing to donate a fan to my parent like elders” – என்று வந்திருந்தது .

என் பதிவுக்கு பதில் போட்டிருந்தார் நண்பர்.

மனம் நெகிழ்ந்து போனேன்.

நாம் கூட இப்படி நினைக்கவில்லையே.

அடுத்தடுத்த நாட்களில், பெரியவர் தென்பட்டால், அவர் மனைவி இல்லை .

நேற்றிரவுதான், இருவரையும் ஒரு சேர பார்த்தேன்.

“ஐயா, என் நண்பர், உங்களுக்கு ஒரு ஃபேன் தர விரும்புகிறார்… வாங்கிகங்க. அவரை கொண்டு வர சொல்லலாமா…”

“தா பாருப்பா. இப்ப இந்த ஃபேன் இருக்கு (குருவி ஃபேன்) . இதையே நான் எப்பவும் யூஸ் பண்றதில்ல. படுக்கும் போது மட்டும் தான்.

இன்னொரு ஃபேன் ரிப்பேர். பையன்ட்ட கொடுத்து இருக்கேன். அதும் வந்துரும். இதுவே போதும்ப்பா. வேணாம்னு சொல்லிடு…”

புன்னகை பொங்க மறுத்தார்.

சும்மா கிடைக்கிறது என்பதற்காக வாங்கி கொள்ள அவர் மனம் மறுத்ததை கண்டு வியந்தேன் .

கொடுப்பவரைவிட, மறுப்பவரே மனதை வெல்லும் மனிதர்கள்.

உயிர்கள் வாழ, இயற்கை தரும் பஞ்ச பூத சக்திகளே போதும்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச சக்திகளில், சகல உயிரினங்களும், மகிழ்வாக வாழ்கின்றன.

மனிதனுக்கு மட்டுமே, கட்டடங்கள், வாகனங்கள், நாற்காலிகள், குளிர்சாதனங்கள் தேவைப்படுகிறது .

ஏழைகள் எப்போதும் இயற்கையின் பிள்ளைகள்.

“இருப்பதைக் கொண்டு வாழு” என்று உபதேசிக்கும் குருவாகத் தெரிந்தார் வெங்கடேசன்.
*
“பேசி பார்த்தேன். வாங்க மறுக்கிறார்கள்…”
– நண்பருக்கு பதில் அனுப்பினேன்.

“அவர்கள் எப்போது கேட்கிறார்களா. அப்போது நாம் தருவோம்.

அதற்குள், அந்த எளிய மனிதர்களை ஓர் நாள் நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்..”

– பதில் அனுப்பி இருந்தார், அந்த அன்பு நண்பர், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் Mr.Antony.

அன்பில் சிறந்தவர்களால், நாளும், பொழுதும் புதிராக கழிகிறது.
[6/5, 06:52] sekarreporter1: 🙏🏽💐
[6/5, 06:57] sekarreporter1: Super sir

You may also like...