Grsj PBJ / k balu case/order/ குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி பாமக தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி பாமக தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி பாமக தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளரும், பாமக செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில், ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகள் மலை போல் குவிந்து கிடப்பதாகவும்,
இதனால் அப்பகுதிமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த மே 7ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள குரோமியை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எனவே குரோமிய கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரனையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்ரவிட்டுள்ளனர்

You may also like...