15/06, 09:05] Senior Advt Wilson: https://x.com/pwilsondmk/status/1801820538136105190?s=46[15/06, 09:08] sekarreporter1: ஆறு மையங்களில் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு / கருணை மதிப்பெண்களை திரும்பப் பெறவும், உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் மறுதேர்வு நடத்தவும் தேசிய தேர்வு முகமை எடுத்துள்ள முடிவு, தேசிய தேர்வு முகமை மற்றும் #NEET செயல்பாடுகளில் எதுவும் சரியாக இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.தேசிய பொது நுழைவுத் தேர்வுகள் இப்போது ஒரு சிலருக்கான சிறப்புத் தேர்வுகளாக உருப்பெற்றுள்ளது.

[15/06, 09:05] Senior Advt Wilson: https://x.com/pwilsondmk/status/1801820538136105190?s=46
[15/06, 09:08] sekarreporter1: ஆறு மையங்களில் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு / கருணை மதிப்பெண்களை திரும்பப் பெறவும், உயர்மட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் மறுதேர்வு நடத்தவும் தேசிய தேர்வு முகமை எடுத்துள்ள முடிவு, தேசிய தேர்வு முகமை மற்றும் #NEET செயல்பாடுகளில் எதுவும் சரியாக இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.
தேசிய பொது நுழைவுத் தேர்வுகள் இப்போது ஒரு சிலருக்கான சிறப்புத் தேர்வுகளாக உருப்பெற்றுள்ளது..

தேசிய தேர்வு முகமையானது மீண்டும் பின்வரும் சட்டவிரோத நடவடிக்கைகளைச் செய்கிறது:

மறுதேர்வுகள் நடத்தப்படுகிறது எனில், இந்த 1563 மாணவர்கள் எப்படி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களோடு பொருந்துவார்கள்?
இந்த 1563 மாணவர்களுக்கு புதிய தேர்வுத்தாள் எப்படி அமைக்கப்படும்? எளிதானதாகவா, கடினமானதாகவா அல்லது மிதமானதாகவா?
இரண்டு வெவ்வேறு தேர்வுகள் மற்றும் வெவ்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் தரவரிசை எவ்வாறு தீர்மானிக்கப்படும்?
இரண்டாவது பிரச்சினை இயற்பியலில் ஒரு தவறான  பதிலுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களைப் பற்றியது.
இயற்பியலில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான விடைக்குறிப்பு தொடர்பாக 13,373 எதிர்ப்புகள் வந்ததாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது.
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தின் பழைய மற்றும் புதிய பதிப்புகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, இந்த கேள்விக்கு ஒரு பதிலுக்கு பதிலாக இரண்டு பதில்கள் சரியானவை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது..
இதன் மூலம் தேசிய தேர்வு முகமையானது அறிக்கைத்தாளின் கொள்கையின் பின்னால் ஒளிந்து கொள்கிறது.. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரி என்று கண்டறியப்பட்டால், இரண்டில் ஏதாவது ஒரு சரியான பதிலை அளித்தவர்களுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அது கூறுகிறது..
“அனு” தொடர்பான NCERT- ன் பழைய பாடபுத்தகத்தில் உள்ள விடை புதிய பாடப்புத்தகத்தில் திருத்தப்பட்ட நிலையில், எப்படி பழைய மற்றும் புதிய பாடப்புத்தகங்களில் உள்ள விடைகள் இரண்டும் சரியாக இருக்கும் மற்றும் இதற்கு தகவல் அறிக்கைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கை எவ்வாறு பொருந்தும்.. முயற்சி செய்த அனைவருக்கும் நான்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும்?
தேசிய தேர்வு முகமையின் அலட்சியத்தால் அமைக்கப்பட்ட தவறான விடைக்குறிப்பின் காரணமாக இந்த கேள்வியை புறக்கணித்த மாணவர்களுக்கு இது அநீதி இல்லையா?
தேசிய தேர்வு முகமையானது தான் இழைத்த தவறுக்காக, எதிர்மறை மதிப்பெண் அளிக்க அஞ்சி, இந்த கேள்வியை முயற்சிக்காத மற்ற மாணவர்களுக்கு நான்கு மதிப்பெண்களைப் பறிக்க முடியுமா?
720/720 பெற்ற 17 தேர்வர்களின் அசல் எண்ணிக்கை 67 ஆக எப்படி அதிகரித்தது மற்றும் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்பட்ட பின் 720/720 பெற்ற தேர்வர்களின் தற்போதைய எண்ணிக்கை என்ன?
தேர்வுகளின் கசிவு மற்றும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் போன்றவற்றுக்கு சிபிஐ விசாரணை உட்பட, தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள் மற்றும் இயக்குனர் மீது ஒன்றிய சுகாதாரத்துறை எத்தகைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது?
தேசிய தேர்வு முகமையானது இயற்பியலில் அந்த தவறான விடைக்குறிப்பிற்காக 24 இலட்சம் மாணவர்களுக்கும் நான்கு மதிப்பெண்களை வழங்க வேண்டும்..
இன்னும், #NEETUG2024 தேர்வுகள் என்ற பிரச்சினையில் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன!
இதற்கு ஒரே தீர்வு நீட் ஒழிக்கப்படுவதுதான்!

BANNEET.

You may also like...