நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் தன்னை பற்றி சமூக வலைதளத்தங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா தெரிவித்து வருவதாக கார்த்திக் குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பாடகி சுசித்ரா, தொடர்ந்து தன் மீது அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாக, நடிகர் கார்த்திக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் குமார் – பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி பேசியிருந்தார்.

பாடகி சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் தன்னை பற்றி சமூக வலைதளத்தங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா தெரிவித்து வருவதாக கார்த்திக் குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் செல்லாததால் வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...