Smsj bench அதிரடி உத்தரவு for petner adv purushothaman அரசு சொத்துக்களை பாதுகாக்க தவறும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அரசு நிலம் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரும் வழக்குகளில் முறையாக அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என, அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் மூன்று மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காதராவுத்தூர் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு, அரசுக்கு ஆதரவாக செயல்படாத அரசு வழக்கறிஞர்களின் செயல், தவறான நடத்தை மட்டுமல்லாமல் குற்றமும் கூட. அரசு சொத்துக்களை பாதுகாக்க தவறும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தது.

மேலும், அரசு நிலம் தொடர்பான வழக்குகளில் முறையாக அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மூன்று மாதங்களில் உரிய சுற்றறிக்கைகள் அல்லது விதிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும் என, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை மற்றும் வணிகவரித் துறை செயலாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்குகளை முறையாக நடத்தாத அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...