ஐகோர்ட் today News tamil July 23

[22/07, 10:57] sekarreporter1: முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூலை 25க்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் சென்றடைய வில்லை என நீதிமன்றத்தில் தகவல்

திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு
[22/07, 11:07] ZThan Sasikumar: வழக்கறிஞராக பதிவு செய்பவர்களிடம் ஏன் நன்கொடை வசூலிப்பு, தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

வழக்கறிஞராக பதிவு செய்பவர்களிடம் நன்கொடையாக 25 ஆயிரம் வசூலிப்பு எனவும் மனுவில் புகார்.

ஏன் வழக்கறிஞர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
[22/07, 11:28] sekarreporter1: எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்களிடையே மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததின் பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக்கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

முறையிட்டை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளனர்.
[22/07, 11:39] sekarreporter1: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020 – 21 ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021– 22 ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்றுமுதல் பெற்றதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது எனவும், இதன்மூலம் லாபம், வேறு திருப்பி விடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டாஸ்மாக்–குக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்–கில் ஊழல் நிலவுவதாகவும், சென்னை விமான நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள் விற்பனைக்கு தடை விதித்து 1986 ல் மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதிதது 2003 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தது.

அதேசமயம், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது அரசின் கொள்கை முடிவு எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[22/07, 11:59] sekarreporter1: முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூலை 25க்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் சென்றடைய வில்லை என நீதிமன்றத்தில் தகவல்

திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு
[22/07, 12:14] sekarreporter1: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யூ டியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ டியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, யூ டியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.
[22/07, 12:46] sekarreporter1: சட்ட விரோத பண பரிமாற்ற சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யபட்ட மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, நீதிபதி விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[22/07, 12:49] sekarreporter1: முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்றத்துக்குள் திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பான, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முந்தையை அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றது. சபை மீறிய செயல் என குற்றம் சாட்டி, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் சென்றடைய வில்லை என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 25- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[22/07, 13:45] sekarreporter1: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது எனத் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[22/07, 14:20] ZThan Sasikumar: வழக்கறிஞராக பதிவு செய்ய வரும் சட்டக்கல்லூரி மாணவர்களிடம நன்கொடையாக 25 ஆயிரம் வசூலிப்பது ஏன்? யாருக்காக வசூலிக்கப்படுகிறது என பதிலளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பூபாலன், தன்னை வழக்கறிஞராக பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர்மீது காவல்துறையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என விண்ணப்பத்தை பார்கவுன்சில் நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பூபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், குற்றத்திற்கு தன் மீது போதிய ஆதாரங்கள் இல்லாத போதும், வழக்கு நிலுவையில் இருப்பதற்காக தன்னை வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சில் மறுத்து விட்டது.
மேலும், வழக்கறிஞராக பதிவு செய்ய வரும் அனைவரிடமும், நன்கொடையாக குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, தாங்கள் வழக்கறிஞர்களாக தொழில் தொடங்கிய காலத்தில் குறைவாக இருந்த நன்கொடை வசூலிக்கும் பழக்கம் அதிகரித்து தற்போது வரை புழக்கத்தில் இருக்கிறது. உரிய காரணமின்றி வசூலிக்கப்படும் பணம் லஞ்சமாகவே கருத முடியும்.

சட்டப்படிப்பை முடித்த மாணவர்களிடம், ஆவணங்களைத் தான் சரிபார்க்க வேண்டும். அதனால், என்ன காரணத்திற்காக நன்கொடை வசூலிக்கப்படுகிறது? யாருக்காக வசூலிக்கப்படுகிறது? என பதிலளிக்க வேண்டும். மேலும், வழக்கறிஞர் பதிவு மறுக்கப்பட்ட பூபாலன் விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு பார்கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[22/07, 16:24] sekarreporter1: சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிகை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை எனவும் அதன் பின்னர் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், போதைப்பொருள் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வர இருந்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலிவதியாகிவிட்டதாக கூறினார்.

அவ்வாறு காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது என வாதிட்டார்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பாகவும் அமாலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[22/07, 16:44] sekarreporter1: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது.

இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடதக்கது.
[22/07, 17:17] sekarreporter1: முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, திமுக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக திமுக தரப்பு பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...