தமிழ் சட்ட அகராதி தயாரிக்க பார்கவுன்சில் திட்டம் chairman Amalraj introduced new app

ஊடக செய்திக்குறிப்பு
உலகின் மூத்த மொழியாம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். சங்க காலம் தொட்டு தமிழும் நீதியும் அறமும் இணைந்தே பயணிப்பவை. ஒரு வழக்கறிஞருக்கு சட்ட அறிவு எப்படி இன்றியமையாததோ அதுபோல் மொழியாளுமையும் முக்கியமானது.
பதிப்புப்பேராசிரியர், சி.வை தாமதோரனார், சட்டத்தமிழ் நூல் இயற்றிய கா. சுப்பிரமணியனார், இளம்பூரணார் உரை பதிப்பித்த வ.உ. சிதம்பரனார் தொட்டு, நீதியரசர் மு.மு. இசுமாயில் தொடர்ந்து இன்றளவும், தமிழ் இலக்கிய
பணிகளில்
வழக்கறிஞர்களின்
பங்களிப்பு
மறுக்கமுடியாதது.
தமிழில் சட்ட நூல்களை இயற்றவும், சட்டச்சொற்களை உருவாக்கவும், பிறமொழி சட்டச்சொற்களை, தமிழ் மொழியாக்கம் செய்யவும், இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடுத்த தலைமுறைக்கு சட்டத்தமிழை எடுத்துச்செல்லும் பணியை தமிழக வழக்கறிஞர் குழுமம் (பார்கவுன்சில்) மேற்கொள்ள உள்ளது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் மட்டுமல்லாது எளிய மக்களும் அறியும் வகையில் ஒரு சட்டத்தமிழ் பேரகராதி / சட்டச் சொற்களஞ்சியத்தை தொகுக்கவுள்ளோம்.
முதற்கட்டமாக வழக்கறிஞர்கள் தாங்கள் அறிந்த பிறமொழி
சட்டச்சொற்களை தமிழாக்கம் செய்தும், புதிய சட்டச்சொற்களை தமிழில்
உருவாக்கியும்
இப்போது
அறிமுகப்படுத்தப்படும் இணையதளம்
https://www.lawintamil.org/ மூலம் அனுப்பலாம்.
தமிழறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் துணையோடு இச்சட்டச்
சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
இணைக்கப்படும்.
சட்டசொற்களஞ்சியத்தில்
உலகின் மூத்தமொழியாம் செம்மொழி தமிழுக்கு நாம் செய்யக்கூடிய நன்றியும், கடமையும் இதுவெனக்கருதி ஒவ்வொரு வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பொதுமக்களும், தமிழறிஞர்களும், தொழில்நுட்ப, கணிணி மற்றும் இணைய வல்லுநர்களும் இணைந்து இப்பெரும்பணியை சிரமேற்கொண்டு செய்வோம், ஊர் கூடி இணைந்து சட்டத்தமிழ்தேரை இழுப்போம் வாரீர்.
இந்த வலைத்தளத்தை கிளிக் செய்யவும்
https://www.lawintamil.org/
P.S.A
(பி. எஸ். அமல்ராஜ்)
தலைவர், பார் கவுன்சில்

குறிப்பு – தமிழ் சட்ட அகராதி உருவாக்க அனைவருக்கும் பகிரவும்.
[12/08, 13:52] sekarreporter1: 👍

You may also like...