dkj pbj தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைக்காக சிறப்பு புலனாாய்வுக் குழு அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைக்காக சிறப்பு புலனாாய்வுக் குழு அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் குடிசைவாசிகளுக்கு மாற்று இடமாக வழங்கப்பட்டுள்ள பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாகவும், போதைப் பொருட்களால் மாணவ மற்றும் இளைய சமூகத்தினர் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ,
பெரும்பாக்கத்தில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு மற்றும் காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைக்காக சிறப்பு புலனாாய்வுக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்காணிப்பார் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து , சிறப்பு புலனாய்வுக் குழு மாநில அளவில் மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்ட மற்றும் தாலுகா அளவில் அமைக்க வாய்ப்புள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...