child posco case state pp jinna heated arguments in smsj bench

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்ற போலீஸ் கோரிக்கையை ஐகோர்ட் நீதிபதிகள் ஏற்றனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் , தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என்.மாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்து கூறியதாவது-

பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் உள்ளார், சட்டவிரோத காவலில் இல்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல , விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ் பெக்டர் இடமாற்றம் செய்துவிட்டோம். வழக்கமாக போலீசார் யார் மீதாவது புகார் வந்தால் உடனே அந்த போலீசாரை டிஜிபி இடமாற்றம் செய்துவிடுவார். அப்படி தான் தற்போதும் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார். யார் வீடியோவை சமூக வளையதங்களில் பரப்பி விட்டனர். அதை எப்படி அகற்ற வேண்டும்என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சிறுமியின் தாய் ஒருவர் மீதும் அவரது சகோதரிவேறு ஒருவர் மீதும் மாறி மாறி புகார் கூறிவருகிறார்கள். எனவே போலீசார் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.இந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் பெற்றோம் வசம் உள்ளார். எப்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரும். இதை கோர்ட் முதலில் தெளிவு படுத்த வேண்டும். போக்சோ வழக்கு என்பதால் போலீசார் கவனமாக தீவிரமாக விசாரணை நடத்துகிறார்கள். பாதுகாப்பு இல்லை என்று போலீசாரிடம் யாரும் தெரிவிக்காமல் கோ்ட்டில் வேண்டுமென்று புகார் கூறுகிறார்கள். இந்த வழக்கில் கோர்ட் ரகசிய விசாரணை நடத்த வேண்டும்.அப்பொழுதான் உண்மை தெரிய வரும் என்றார்.

,இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு,ரகசிய விசாரணை நடத்தலாம், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1ம் தேதி ஒத்தி வைக்கிறோம். அன்றைக்கு மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...