Actor Singamuthu engages a lawyer to defend him in a suit for damages filed by actor Vadivelu. Justice RMT Teekaa Raman of #MadrasHighCourt grants 2 weeks for the lawyer to file a Vakalat & counter affidavit to the plea for interim orders.

[03/09, 12:12] sekarreporter1: யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து தரப்புக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[03/09, 12:26] sekarreporter1: Actor Singamuthu engages a lawyer to defend him in a suit for damages filed by actor Vadivelu. Justice RMT Teekaa Raman of #MadrasHighCourt grants 2 weeks for the lawyer to file a Vakalat & counter affidavit to the plea for interim orders. @THChennai BG👇
[03/09, 12:40] sekarreporter1: Actor Singamuthu engages a lawyer to defend him in a suit for damages filed by actor Vadivelu. Justice RMT Teekaa Raman of #MadrasHighCourt grants 2 weeks for the lawyer to file a Vakalat & counter affidavit to the plea for interim orders. @THChennai BG👇

You may also like...