balu: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    [7/22, 08:58] K balu: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும்

    உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2010ஆம் ஆண்டு நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கு 114 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மக்களவை கலைக்கப்பட்டதின் காரணமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் காலாவதியானது .

    இதனையே காரணம் காட்டி மத்திய அரசு நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்தும் திட்டத்தை கைவிடுவது கவலை அளிக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து ஆண்டு அல்லது பத்து ஆண்டுகளுக்குள் பதவி வகித்து நல்ல அனுபவம் பெற்று அனைத்து தரப்பு வழக்குகளையும் கையாளும் திறன் பெற்று நீதி பரிபாலனம் செய்யும் நிலையில் ஓய்வு பெற்று விடுகின்றனர். இதன் காரணமாக திறமையான அனுபவம் பெற்ற பல நீதிபதிகளை நீதித்துறை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொன்னால் நீதிபதிகள் வயது வரம்பை நிச்சயமாக உயர்த்த வேண்டும். குறைந்தது உயர் நீதிமன்ற நீதிபதிகள் 15 முதல் 20 ஆண்டுகள் பதவி வகிக்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று மாபெரும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை நடத்தும்.

    கே பாலு, வழக்கறிஞர்
    தலைவர், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை, இணைத் தலைவர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்.
    [7/22, 09:01] Sekarreporter1: 🌹

You may also like...