Chief justice of india சந்திரசூட் /கைவினைக்கலைகள் கற்றுத்தரும் வகுப்பில், சரியான அளவு ஊசியை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டேன். அதற்காக, ஆசிரியர் என் கைகளில் பிரம்பால் அடித்தார். மிகவும் அவமானமாக உணர்ந்த நான், அதை என் பெற்றோரிடம் கூறாமல், காயம் அடைந்த வலது கையை அவர்களிடம் காட்டாமல், 10 நாட்கள் மறைத்தேன்.

Advertisement

பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது: தலைமை நீதிபதி


காத்மாண்டு: பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படிக்கும்போது, ஆசிரியர் பிரம்பால் என் கையில் அடித்த வடு, இன்றும் மனதில் ஆறாமல் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த, சிறார்களுக்கான நீதி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:

குழந்தைகளை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பது, அவர்களின் வாழ்நாள் முழுதும் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் 5ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

கைவினைக்கலைகள் கற்றுத்தரும் வகுப்பில், சரியான அளவு ஊசியை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டேன். அதற்காக, ஆசிரியர் என் கைகளில் பிரம்பால் அடித்தார். மிகவும் அவமானமாக உணர்ந்த நான், அதை என் பெற்றோரிடம் கூறாமல், காயம் அடைந்த வலது கையை அவர்களிடம் காட்டாமல், 10 நாட்கள் மறைத்தேன்.

கையில் இருந்த காயம் ஆறினாலும், அந்த வடு மனதில் இன்றும் ஆறாமல் உள்ளது. இது போன்ற அவமானங்களின் தாக்கம் குழந்தைகள் மனதில் மிக ஆழமாக பதிந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், நம் நாட்டின் சிறார்களுக்கான நீதி வழங்கும் முறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் பேசுகையில், ”இந்தியாவில் சிறார்களுக்கான நீதி வழங்கும் நடைமுறையில், போதிய உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் இல்லாதது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

”குறிப்பாக, ஊரக பகுதிகளில் நெரிசலான மற்றும் தரமற்ற சிறார் தடுப்பு மையங்களால், சிறார்களுக்கு முறையான மறுவாழ்வு தடைபடுகிறது,” என்றார்.

Adve

You may also like...