dgp Rajesh doss case NAVJ order

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதித்த தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைத்துள்ள விவரத்தை விழுப்புரம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், ஜனவரி 6ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்னதாக, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
ராஜேஸ்தாஸ் தரப்பில்,
வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி ஆனன்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, விழுப்புரம் நீதிமன்றத்தில் எதுவும் நடக்காது என தெரிவித்தார்.

மேலும் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட விவரத்தை அரசு வழக்கறிஞர் மூலம் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு அரசுத்தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...