GRSJ order /திமுக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[25/05, 15:13] sekarreporter1: https://youtu.be/InioWxutiUw?si=eEBRLgoSPrxkoT38
[25/05, 15:13] sekarreporter1: 👍

[25/05, 15:13] sekarreporter1: https://youtu.be/InioWxutiUw?si=eEBRLgoSPrxkoT38
[25/05, 15:13] sekarreporter1: 👍

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வருமான வரித்துறையினர், அத்தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், தாமோதரன் – விமலா தம்பதியர் வீட்டில் நடத்திய சோதனையில் 11 கோடியே 48 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த தொகையை கதிர் ஆனந்த்-க்கு சொந்தமானது எனக் கூறி, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மே 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி,பினாமி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி
கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து கதிர் ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கில் கதிர் ஆனந்தை இணைத்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இதையடுத்து, மே 31ம் தேதி மனுதாரர் அல்லது அவருடைய வழக்கறிஞர் விசாரனை அதிகாரி முன்பு ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

[25/05, 15:13] sekarreporter1: https://youtu.be/InioWxutiUw?si=eEBRLgoSPrxkoT38
[25/05, 15:13] sekarreporter1: 👍

You may also like...