grsj order elephant stayed gov appeal sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1670978700601622529?t=I_96ExjDoPXPWQnLJ4Pp0Q&s=08 [6/20, 07:45] sekarreporter1: கோவில்களிலோ, தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வாங்கி, வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை

[6/20, 07:45] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1670978700601622529?t=I_96ExjDoPXPWQnLJ4Pp0Q&s=08
[6/20, 07:45] sekarreporter1: கோவில்களிலோ, தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வாங்கி, வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை பராமரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ” இனிவரும் நாட்களில் கோவில்களிலோ தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறையின் செயலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவில் இந்து சமய அறநிலையத் துறையினர் எதிர்மனுதாரராக இல்லை. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு பொருந்தும் படி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

You may also like...