https://youtu.be/hsVBELSMeaU?si=FacykXMEFztc9WpZ நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அதிரடி உத்தரவு tv திவால. வழக்கு

அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பான நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1995-96ம் ஆண்டுகளில், வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அதிமுக முன்னாள் எம்பி-யும்,
அமமுக பொதுச் செயலாளரருமான டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி. தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக, அமலாக்கத் துறை, 2001ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வு விசாரித்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ஃபெரா சட்டத்தின் கீழ் விதி்க்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும், அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. இது உரிமையியல் பிரச்சினை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.

டிடிவி.தினகரன் சா்ரபில், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், இது சட்ட ரீதியாக தவறு என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், அபராதம் என்பது கடன் தான் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அபராதத் தொகையை செலுத்தாமல் இருக்கும்போது திவாலானவர் என அறிவிக்கக் கோரும் மனு விசாரணைக்கு உகந்தது தான் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கை பொறுத்த வரை அபராதம் விதித்த உத்தரவை இறுதி செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பே, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர்.

மேலும், அமலாக்கத் துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தினகரனுக்கு எதிராக சட்டப்படி
மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

You may also like...