Idol Case dismissed. Court says Idol Wing CID is already investigating the theft cases and recovery is part of such investigation. Cj order state pp ginna argued .

[3/9, 11:26] Sekarreporter:

Idol Case dismissed. Court says Idol Wing CID is already investigating the theft cases and recovery is part of such investigation. Cj order state pp ginna argued .

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை சிபிஐ தனி குழு அமைத்து மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில்,
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க சென்றபோது அங்கு உள்ள வாஷிங்டன் அருங்காட்சியகத்தில், தமிழகத்தை சேர்ந்த பழமைவாய்ந்த சிலைகள் இருந்த தாகவும்,இதுபோல்
வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்லப்பட்ட இந்திய சிலைகளைமீட்டு இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்..கடத்திசெல்லப்பட்ட சிலைகளை சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து விசாரித்து மீட்க நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனுதார ர் வழக்கு தொடர்ந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[3/9, 11:28] Sekarreporter: அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலைகளை மீட்க தனி குழுவை நியமிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது, வாஷிங்டன் நகரில் உள்ள பெரார் அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், ஐந்து முக ருத்ராட்சம் உள்ளிட்ட புராதன பொருட்கள் இருந்ததை கண்டதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரித்து சிலைகளை மீட்கும் வகையில் இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் தனி குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை குற்றவியல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி ஏற்கனவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றியதை எதிர்த்து மனுதாரர் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியை நியமனம் செய்ததாகவும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் இந்த தகவல்களை மனுதாரர் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, இந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...