Judge ananth venkadesh மூன்றாம் பாலினத்தவர் குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பது தொடர்பாக வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பது தொடர்பாக வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருவிய பாலினத்தோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆ.டி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருவிய பாலினத்தவர் குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பது தொடர்பான வரைவு விதிகள் வகுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You may also like...