Kumara Devan: வரலாற்றில் இன்று ஜுன் 12- 1975 :— 1975, ஜூன் 26 முதல் 1977, மார்ச் 21 வரை நெருக்கடி நிலை என்ற பெயரில் சர்வாதிகாரம் சதுராட்டம் போட்ட 19 மாதங்களுக்கு முன்னோடியாக அமைந்த ராஜ்

[6/13, 07:36] Kumara Devan: வரலாற்றில் இன்று
ஜுன் 12- 1975 :—

1975, ஜூன் 26 முதல் 1977, மார்ச் 21 வரை நெருக்கடி நிலை என்ற பெயரில் சர்வாதிகாரம் சதுராட்டம் போட்ட 19 மாதங்களுக்கு முன்னோடியாக அமைந்த ராஜ் நாராயணன் Vs இந்திரா காந்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இந்திரா காந்தி நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த நாள்.

– சு.குமாரதேவன்.

★ 1967-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்திக்கு மிகப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவே தி.மு.க., மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவில் தான் இந்திரா காந்தி ஆட்சி தொடர்ந்தது. 1967-ல் உ.பி.யில் மொத்தமுள்ள 85 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

★ பிறகு வந்த 1971-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1967 தேர்தலை விட அதிகப்படியான இடங்களைப் பெற்று இந்திரா காந்தி அறுதிப் பெரும்பான்மை பெற்றார். தமிழ்நாட்டில் தி.மு.க.-வோடு அவரது இ.காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது.

★ 1974-க்கு பிறகு இந்திராவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. குஜராத்தில் பழைய காங்கிரஸ், ஜன சங்கம், பாரதிய லோக்தளம் மற்றும் சோசலிஸ்ட கட்சி ஆகியவை ஒன்றிணைந்து “ஜனதா மோர்ச்சா” என்ற கட்சியை உருவாக்கி 182 தொகுதிகளில் 82 இடங்களில் வெற்றிப்பெற்றும், சுயேச்சைகள் 20 பேரும் வெற்றிப்பெற்றனர். இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு 75 இடங்களே கிடைத்தது. இந்த தேர்தல் முடிவுகள் ஜூன் 12.06.1975 அன்று காலை இந்திராவுக்கு தெரியவந்தது.

★ 1971-ல் ரேபரேலி தொகுதியில் இந்திரா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சம்யுத்த சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜ் நாராயணனைவிட சுமார் 1,11,810 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றிருந்தார். மேற்கண்ட வெற்றியை எதிர்த்து ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 கீழ் (Representation of People Act) இரண்டு காரணங்களைத் தனது தேர்தல் வழக்கில் குறிப்பிட்டிருந்தார். முதலாவது யஷ்பால் கபூர் என்பவர் பிரதமர் இந்திராவின் தனிச் செயளாளர் ஆக பணியாற்றியவர். ரேபரேலித் தொகுதியில் இந்திரா காந்தியின் தேர்தல் ஏஜென்ட் ஆகப் பணியாற்ற 07.01.1971 அன்று சம்மதித்தார் ஆனால் அவர் தன்னுடைய அரசு பணியை ராஜினாமா செய்வதாக 13.01.1971-ல் தான் கடிதம் கொடுத்தார். கிட்டதட்ட தேர்தல் ஏஜென்ட் பொறுப்பை ஏற்று ஒரு வாரம் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பினார். அரசு உழியர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் தடை உள்ளது. ஜனவரி மாதம் 13-ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்த யஷ்பால் கபூர் டிசம்பர் 29-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் ஏஜென்ட் ஆக கருதப்படுவார். எனவே இது ஒரு விதி மீறல். மேலும், யாஷ்பால் கபூரின் ராஜினாமா கடிதம் ஜனவரி 25-ம் தேதி தான் ஏற்கப்பட்டு அரசு பணியிலிருந்து கிட்டதட்ட 12 நாட்கள் கழித்துதான் விடுவிக்கபட்டார்.

★ இரண்டாவதாக இந்திரா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து ரேபரேலியில் பேசிய பிரச்சார மேடை உ.பி. அரசாங்கத்தின் பொதுப் பணித் துறையால் கட்டபட்டிருந்தது. அங்கு பேசியதும் ஒரு விதி மீறல்.

★ மேற்கண்ட இரண்டும் இந்திரா காந்திக்கு எதிராக அமைந்த காரணத்தினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123, விதி 7-ன் கீழ் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார் ( பின்பு இந்தப் பிரிவு இந்திரா காந்தியால் நீக்கம் செய்யப்பட்டது).

★ மேற்படி தீர்ப்பின்படி ஆறு ஆண்டுகள் எந்தத் தேர்தலிலும் இந்திரா காந்தி போட்டியிட முடியாது. ரேபரேலிக்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் தீர்ப்புக்குப் பின்னால் நடைமுறைக்கு வரவேண்டும்.

★ மேற்படி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வசதியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கம்போல் தனது தீர்ப்பை 20 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது.

★ மேற்கண்ட தீர்ப்பின் விவரம் N.K.சேஷன் என்ற அதிகாரி மூலம் இந்திரா காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வழக்கினை விசாரித்த நீதிபதி V.R. கிருஷ்ணய்யர் அமர்வு ஜூன் 24-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முழு தடை விதிக்காமல் மக்களவை உரறுப்பினராக இந்திரா காந்தி தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் அவர் மக்களவையில் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடலாம் மற்றும் மக்களவைக்குச் செல்லலாம் ஆனால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ, பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளமோ பெற முடியாது என்றும் மேலும்அவர் அமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ நீடிப்பதற்கு தடை எதுவும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

★ இந்த தீர்ப்பிற்கு அடுத்த நாள் 25.06.1975 நள்ளிரவு நெருக்கடி நிலையினை பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார்.

★ நெருக்கடி நிலைக்கால அத்துமீறல்கள், அது ஏற்படுத்திய விளைவுகள், பாதிப்புகள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை ஜூன் மாதம் 25-ம் தேதி சுருக்கமாக பார்க்கலாம்.

“தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் மைக்கேல் டி – குன்ஹா எப்படி தவிர்க்க முடியாதவரோ, அப்படி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வரலாற்றில் ஜக்மோகன்லால் சின்ஹா தவிர்க்க முடியாதவர்”.
##மீள் பதிவு##
[6/13, 10:14] Sekarreporter: 🌹

You may also like...