Lingan Mha Advt: ஒரு காலத்தில் , தேவதைகளால் உண்டாகின்றன எனப்பட்ட வியாதிகள் பலவும் சிறுசிறு கிருமிகளால் உண்டாவதாக நிரூபணம் செய்யப்பட்டு வருகின்றன. மகாமாரி என்ற கொள்ளை நோய் ( Bubonic Plague ) எலிகள் மூலமாக Plague Bacilli –

[12/30/2021, 06:51] Lingan Mha Advt: ஒரு காலத்தில் , தேவதைகளால் உண்டாகின்றன எனப்பட்ட வியாதிகள் பலவும் சிறுசிறு கிருமிகளால் உண்டாவதாக நிரூபணம் செய்யப்பட்டு வருகின்றன. மகாமாரி என்ற கொள்ளை நோய் ( Bubonic Plague ) எலிகள் மூலமாக Plague Bacilli – என்ற கிருமியால் உண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரியாக விஷசுரமும் ( Malaria ) , வாந்தி பேதியும் ( Cholera ) சிறு பூச்சிகளால் உண்டாகின்றன. இவ்விதமாக ஒரு காலத்தில் , நமது நாட்டில் இன்றைக்கும் , பேய் பிசாசு , மாரி அம்மனால் உண்டாகின்றனவென எண்ணி வந்த நோய்கள் , சிறு சிறு பூச்சிகளால் உண்டாகின்றன வென்று வைத்திய நூலோர் தெரிவிக்கின்றார்கள்.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1392.

புதுவுலகம் / மே 1935
[12/31/2021, 07:20] Lingan Mha Advt: ஆங்கில நாட்டார் தங்கள் தேசத்தைத் தாய் நாடு (Mother Country) என்கிறார்கள். ஜெர்மனியர் தங்கள் நாட்டை தந்தையர் நாடு ( Father Land ) என்கிறார்கள். இவ்விதமாகப் பல்லாயிரம் வருஷங்களாக மக்கள் மனதில் தேசியம் ஊடுருவி வந்திருக்க , இதன் சார்பாக அந்தந்த ஊர் மக்கள் அவரவர் சுயராஜ்யத்திற்கு எவ்வளவு தியாகந்தான் செய்ய மாட்டார்கள் ? காங்கிரஸ் கடந்த 10 , 12 வருடங்களாக தேசியத்தை வளர்த்து வருகின்றது. நாடு முழுமையும் தேசியம் தேசியம் என்றும், சுயராஜ்யம் சுயராஜ்யம் என்றும் இந்த இரண்டு சொற்களைக் கொண்டு மனிதர்களுடைய மனத்தை ‘ஹிப்னோடைஸ்’ – அதாவது மயக்கி – வருகின்றது. உலகில் இந்த இரண்டு சொற்களால் மயங்காத நாடுகள் இல்லை. My Country is in danger அதாவது என்னுடைய நாடு அபாயத்திலிருக்கின்றது என்று ஆங்கில அதிகாரிகள் சொன்னவுடன் ,எழுந்தனர் கோடிக்கணக்கான ஆங்கில ஆயுத பாணிகள்; இந்த மயக்கத்தால்தான் காங்கிரஸ் அடைந்து வரும் தற்கால செல்வாக்கு என அறிக ! இந்த மயக்கத்தைக் கொண்டே எழுந்த ஹிட்லரிசமும் ( Hitlerism) பாசிசமும் ( Fascism ) என அறிக!! உலகில் இனிய வரும் மகாயுத்தங்களும் இந்த மயக்கத்தால் தான் ஈழப் போவதென அறிக !!!

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1403.

புதுவுலகம் / மே 1935.
[1/1, 07:38] Lingan Mha Advt: மெய்ஞ்ஞானத்தாலெழும் மன எழுச்சி இந்த புராணங்களாலும் எழ முடியாது. கண்களால் பார்த்து ஆச்சரியப்படத்தக்க காட்சிகள் ஸயன்ஸில் நிறைந்துள்ளன. மெய்ஞ்ஞான முறைப்படிச் சிந்திக்கும் சிந்தனைகள் ( Scientific Speculation ) அனுபவத்திற்கு ஒத்துவராமல் போன போதிலும் , வேறுவிதச் சிந்தனைகளுக்கு வழி காட்டுகின்றன. புதிய புதிய சிந்தனைகள் மூலமாக உண்மை விளங்கி வருகின்றது.

ஆனால் மதங்களால் உண்டாகும் மனவெழுச்சியோ, அந்தக் காலத்திற்கு மாத்திரம் எழுந்து உடனே மாறிவிடுகின்றது. உண்மைக்கு வெகு தூரம் கொண்டு போகின்றது. இதுதான் மத சிந்தனைகளுக்கும் , ஸயன்ஸ் சிந்தனைகளுக்குமுள்ளபெருத்த வித்தியாசம். மத சிந்தனைகளால் எந்த ஞானமும் பெருகியதாகச் சொல்ல முடியாது. ஆனால் விஞ்ஞான சிந்தனைகளால் சகல ஞானமும் தினே தினே பெருகிக் கொண்டே வருகின்றன. இதுவே விஞ்ஞானத்தின் சிறப்பு.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் . பக்கம் 1423.

புதுவுலகம் / ஜுன் 1935.
[1/2, 06:53] Lingan Mha Advt: கிளிஞ்சலை வெள்ளி போலும் , கயிற்றைப் பாம்புபோலும் பாவித்து நடப்பதைப்போல், பிரம்மத்தை உலக சராசரி பொருள்களாகப் பாவிக்கின்றோம் என்பார்கள் வேதாந்திகள்.

இந்த திருஷ்டாந்த வாதத்தில் ( Arguments of analogy ) ஒரு பிழை இருந்து வருகிறது.அதாவது பிரமம் உலகம் என்ற சொல்லளவில் அடங்கிய பொருளை யாரும் கண்களால் பார்த்ததில்லை. ஆனால் காட்டும் திருஷ்டாந்திரத்தில் கிளிஞ்சல் , வெள்ளி , கயிறு , பாம்பு முதலிய திருஷ்டாந்திரப் பொருட்களைக் கண்ணால் பார்த்து வருகின்றோம். இப்பொருள்களைப் பார்த்திராதவனுக்கு ஒன்றை மற்றொன்றாகப் பார்க்கும் மருள் எழாது. பார்ப்பதில் மருள் ஒன்றுமில்லை. கண்களால் மருள் எழுவதில்லை – கண்கள் ஏதோ பொருள் இருப்பதாக காட்டுகின்றது. ஆனால் மருள் எப்படி எழுகிறதென்றால் , இவ்விரண்டு வஸ்துக்களையும் பார்த்தவன் ஒன்றை மற்றொன்றாக அர்த்தப்படுத்துகிறான். பார்த்த பொருள் ஏதோ வென்று அதனை அர்த்தப்படுத்துவதில் மருள் உண்டாகின்றது. இரண்டு பொருட்களில் ஒன்றை மாத்திரம் பார்த்தவனுக்கு வெள்ளியென்றாகிலும் பாம்பென்றாகிலும் எண்ண முடியாது. பாம்பைப் பார்த்திராத வன் கட்டையைப் பார்த்து எவ்வாறு பாம்பு என்று எண்ணுவான் ? நாம் உலகமொன்றைத்தான் பார்க்கின்றோம். பார்த்த பொருள்களைத்தான் மற்றொன்றாகப் பாவிக்க முடியும். பாராத பிரமத்தை உண்மை என்று கூறி , பார்க்கும் உலகை மித்தை , மாயை , மருள் என்று கூறுவது , குருடன் பார்க்கும் பார்வையாகும். மலடி மக்களைப் பெற்றுள்ளதைப் போன்ற கதையையொக்கும். வேதாந்திகள் தங்கள் வாதத்தில் மறைந்துள்ள இந்த வழுவைக் கவனிக்காமல் பேசுவது விசாரிக்கத்தக்கதே.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1413,1414.

புதுவுலகம் / ஜுன் 1935

You may also like...