Madras hc june 16th orders smsj order cj order c saravananj order

[6/14, 13:45] Sekarreporter: திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிலை வைக்கப்படுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கியுள்ளதாகவும்,அந்த இடத்தில் ஜீவா கல்வி அறக்கட்டளை அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த து.இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி,நீதிபதி என்.மாலா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
[6/14, 15:16] Sekarreporter: வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும் போது அதற்கான உறுதிமொழியை அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம் அவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் சென்னை வந்தனர். ஆன்மிக சுற்றுலாவுற்கு இந்தியா வந்த இவர்கள் 1594 கிராம் கொண்ட 43 லட்சத்து 90 ஆயிரத்து 754 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிந்தும் அதுதவிர 112 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் எடுத்தும் வந்துள்ளனர்.

அவர்களை தடுத்த சுங்க துறை அதிகாரிகள் சந்திரசேகரம் விஜயசுந்தரம் உள்ளிட்டோர்க்கு அபராதம் விதித்தனர்.

இதனை எதிர்த்து சந்திரசேகரம் விஜயசுந்தரம் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வெளிநாடுகளில் இருந்து அணிந்து வருபவர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களுக்கு சுங்க வரி செலுத்தி தேவையில்லை என 2014ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதன்படி தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி சரவணன், வெளிநாட்டினர் உடமைகள் விதி1998-ஆம் ஆண்டின் படியான சட்டத்தின்படி கீழ் கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகு 2016ஆம் ஆண்டு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதாகவும் அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மனுதாரர் ஆன்மீக சுற்றுலாவிற்காக இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளனர் ஆனால் அப்படி வரும் பொழுது இவ்வளவு நகைகள் மதுபாட்டில்கள் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். இந்த அளவிற்கான பொருள்கள் எடுத்து வருவது வணிக ரீதியாக இருக்கலாம் அல்லது அன்பளிப்பாக மற்றவர்களுக்கு அளிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை எடுத்துவரும் போது அதற்கான உறுதி மொழியை சம்மந்தபட்டவர்கள் சுங்க துறையிடம் அளிக்க வேண்டும் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் சுங்க வரித்துறை உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை இதில் தலையிட தேவையில்லை எனக் குறி மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[6/14, 16:19] Sekarreporter: உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக தடுப்புக்காவல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல், பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு ஆதரவாக காவல்துறையின் வன்முறை ஆகியவற்றை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி. கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ பி ஷா, முன்னாள், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற முகமது அன்வர், உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், முகமது நபியைப் பற்றி உத்தரபிரதேசத்தில் பிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் போராட்டங்களை விளைவித்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக மாநில அரசே வன்முறை நடவடிக்கை எடுக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வரகூடாது என முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியதாக கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.

மேலும் அவர் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் உத்தரபிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்
ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் உத்தாவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இந்த கருத்துக்கள்தான் போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்களை லத்தியால் தாக்குவது, போராட்டக்காரர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படுவது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டி அடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி மனசாட்சியை உலுக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான அடக்குமுறையானது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுவதாகவும், கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் மற்றும் பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் ஆகியவற்றில் தானாக முன்வந்து எடுத்த அதே உணர்விலும், அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற பங்கிலும், உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
[6/14, 17:28] Sekarreporter: மருத்துவ மேற்படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன் என மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார் கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள் தான் அதிக கட்டணம் வசூலித்தன எனவும் ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செல்வராஜனிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மனுதாரர் எந்த கல்லூரிக்கும் சாதகமாக செயல்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த 2020ல் எந்த தவறும் நடக்கவில்லை என அறிக்கை அளித்த நிலையில், 2021ல் தவறு நடந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன் என, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக தேர்வுக்குழு செயலாளர் செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[6/14, 17:29] Sekarreporter: மருத்துவ மேற்படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்?

மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக புகார்…

மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மேல் முறையீடு…

எந்த கல்லூரிக்கும் சாதகமாக செயல்படவில்லை என தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் தரப்பு வாதம்….

உயர் நீதிமன்ற உத்தரவின்படி முறைகேடு தொடராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக அரசுத்தரப்பில் தகவல்…

முன்னாள் செயலாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டுன்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு…
[6/14, 17:54] Sekarreporter: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விளக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த அளவு ஒழுக்கத்தை பேணாதபோது காவல் துறைக்கு எதிராக பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என வேதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் காவல்துறை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே கருப்புப் பிலிம் பயன்படுத்துவது, காவல்துறை பெயரை அவர்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்றவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்களிடையே உள்ளதாகவும், ஆனால் அரசால் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பல குற்றச்சாட்டுகள் பொது வெளியில் கிடைத்தாலும், அரசாங்கத்தால் கவனிக்கப்படாமல் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது தளத்தில் தகவல்கள் இருக்கும்போது, ​​ காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், சமூகத்தில் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இவை சீரழிவுக்கும் மற்றும் அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[6/14, 17:56] Sekarreporter: மருத்துவ மேற்படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன் என மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2020 – 21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார் கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்த போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள் தான் அதிக கட்டணம் வசூலித்தன எனவும் ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செல்வராஜனிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மனுதாரர் எந்த கல்லூரிக்கும் சாதகமாக செயல்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த 2020ல் எந்த தவறும் நடக்கவில்லை என அறிக்கை அளித்த நிலையில், 2021ல் தவறு நடந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன் என, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக தேர்வுக்குழு செயலாளர் செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

You may also like...