Madras high court august 2nd 8 orders round up

[8/2, 11:02] Sekarreporter1: எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்….

சென்னை உயர் நீதிமன்றம்

ரூ. 1.10 கோடிய மான நஷ்ட ஈடு கோரி அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி வழக்கு

அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து பதிவிட்டால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி நீதிபதி அறிவுறுத்தல்

உண்மைக்கு புறம்பான உறுதிபடுத்தப்படாத, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

2019, 2020, 2021 ஆண்டுகளில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவடங்களில் டெண்டர் பணிகளில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் மூலம் ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமுக ஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாதங்கள் வெளியிட்ட விவகாரம்

வழக்கு ஆகஸ்ட் 11 தள்ளிவைப்பு
[8/2, 11:36] Sekarreporter1: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது 2019, முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திகும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அப்போது இடைக்கால தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை என கூறிய நீதிபதி, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டால் அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறித்தி உள்ளார்.
[8/2, 13:10] Sekarreporter1: அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் பன்னீர் செல்வம் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கடந்த மாதம் சென்னையை அடுத்த வானகிரத்தில் நடந்த அதே வேளையில் பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு மோதல் எழந்ததாகவும், மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் மனு தாக்கல் மனுவில், அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அதில் அதிமுக அலுவலக சுவாதீனம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சனை இருந்ததாகவும்,அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதாகவும், ஆனால் அவ்வறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மாவட்ட செயலாளராக ஆதிராஜாராஜம் புகார் அளித்ததாகவும் அந்த புகாரை பெற்றுக்கொண்டு ரசீது வணங்கவில்லை எனவும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகு ரசீது கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலக்த்திற்கு வைக்கப்பட்ட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சீலை அகற்றி சாவியை இடைக்கால பொதுச்செயலாளரிடம் அளிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர் அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக கடந்த மாதம் 23ஆம் தேதி புகார் அளித்ததாகவும் ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
[8/2, 15:49] Sekarreporter1: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

அவரது வாதத்தில், மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது தற்கொலை தான் என்றும் தெரிவிக்கபட்டது.

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, அந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்றும், தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
[8/2, 16:28] Sekarreporter1: தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழகம் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சாஸ்தா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், அது பொதுவான அரசு உத்தரவு என்றும், இவர்களுக்கு பொருந்தாது என்றும் சாஸ்தா பல்கலைக்கழகம் நீர்நிலைகள் ஆக்கிரமித்து உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் புது அரசாணையின் கீழ் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்த விண்ணப்பத்துக்கு மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமை தள்ளிவைத்துள்ளனர்.
[8/2, 17:17] Sekarreporter1: சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள் மற்றும் தற்போதைய ஆணையர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா பகுதியில் ஹைதர் மெயின் தெரு மற்றும் சந்திரயோகி சமாதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 40 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக 2007ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், அதை அமல்படுத்தவில்லை என 2015ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மண்டல அதிகாரி மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கட்டடம் தனியாருக்கு சொந்தமானது என்றும், அதனால் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதா என கேள்வி எழவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 40 அடி சாலை 20 அடி சாலையாக மாறும் அளவிற்கு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்திற்கான திட்ட அனுமதி குறித்து மாநகராட்சி அப்போதைய ஆணையரும், மண்டல அதிகாரியும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மண்டல அதிகாரி மட்டும் ஆஜராகி இருப்பதாகவும், தவிர்க்க இயலாத காரணங்களால் அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் ஆஜராக இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அதிகாரிகள் தங்களை நீதிமன்றத்திற்கு மேலானவர்கள் என்றும், தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்றும் நினைத்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கில் தங்கள் தரப்பில் தவறுகள் உள்ளதாகவும், அதற்காக அபராதம் விதித்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள், அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தனர்.

பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

இதையடுத்து இந்த சாலை தொடர்பான உரிமையியல் வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

மேலும், எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டால், கட்டாயம் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தினர்.
[8/2, 17:38] Sekarreporter1: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை மறுதினம் விசாரிக்க உள்ளார்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதான வழக்குகளை தள்ளிவைத்திருந்தார்

இதையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் ஜூன் 23 பொது குழுவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்ற இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[8/2, 17:52] Sekarreporter1: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டது.

இருப்பினும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையும் வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
[8/2, 21:03] Sekarreporter1: தர்மபுரியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்துக்காக குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பழிவாங்க ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக பெண் விரிவுரையாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆயுதப் பயிற்சி எடுத்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கல்லூரி விரிவுரையாளர் உமாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், தர்மபுரியில் வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இளம் ஜோடியின் காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட கலவரத்துக்கு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பழிவாங்க துடி என்ற அமைப்பு ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக காவல் துறையினர் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் துப்பாக்கி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையின் போது தான் குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா என்பது தெரியவரும் எனக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...