Madras high court december 9th order

[12/9, 11:21] Sekarreporter 1: சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குப்பைகள் மீது வலையை போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுவதாகவும், அதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதால், சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[12/9, 12:23] Sekarreporter 1: ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோவை நகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை எஸ் பி க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைn திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கூலி உயர்வை வலியுறுத்தி, வால்பாறையிலி ருந்து கோவை வரை ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல்நிலையத்தில் மனு அளித்ததாகவும் ஆனால் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார்..
நிராகரிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஊர்வலத்தை அனுமதிப்பது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததாகவும் ,ஆனால் அந்த உத்தரவை காவல்துறை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், இந்த மனு விசாரணைக்கு உகந்த அல்ல என்று வாதிட்டார். வால்பாறையிலிருந்து கோவை வரை 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு உரிய பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்றும் ,
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். வால்பாறையில் இருந்து கோவை வரை ஊர்வலம் செல்லும் போது அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்பதால், வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நிராகரிப்பட்டதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் அனுமதி மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் என்று கூறிய மனுவெ தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[12/9, 13:41] Sekarreporter 1: மூன்றாவது குழந்தை பேறுக்காக, அரசுப்பள்ளி ஆசிரியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார்.

விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும், பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கதீஜாவின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[12/9, 14:10] Sekarreporter 1: [12/9, 13:39] Sekarreporter 1: [12/9, 13:39] Sekarreporter 1: வக்கீல் சிறையில் கைதிகளுடன் பேசலாம்
[12/9, 13:39] . Kannadasan. jail Advt🙏: Yes Sir, நேரடியாக பேசலாம்..
[12/9, 13:40] Sekarreporter 1: [12/9, 13:38] . Kannadasan. jail Advt🙏: 🙏
[12/9, 13:39] Sekarreporter 1: வக்கீல் சிறையில் கைதிகளுடன் பேசலாம்
[12/9, 13:39] Sekarreporter 1: The Advocates interview with the prisoners in Tamilnadu Central prisons can meet their clients directly as per the old system. The Prison Department withdrawn it earlier Circular that the Advocates shall interview the prisoners through intercom only. The intervention of Hon’ble Chairman SHRC, Justice Baskaran and Mr.Amalraj ,Chairman Barcouncil of Tamilnadu, the Circular was withdrawn
[12/9, 17:05] Sekarreporter 1: மருவிய பாலத்தினவர் மற்றும் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை  குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், மருவிய பாலித்தனவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு கருத்துகள் கோரப்பட்டதாகவும், கருத்துகள் ஏதும் வராததால் விதிகள் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என கூறினார்.

LGBTQIA PLUS சமூகத்தினருக்கான கொள்கை இன்னும் மூன்று மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் எனவும் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

  1. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.

You may also like...