madras high court june 9th orders roundup cj order anitha sumanthj order c v karthikeyan judge order ananth venkades order

[6/10, 07:23] sekarreporter1: ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன் லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத்தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, ஜூன் 4ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதை ஏற்று பதில்மனு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஜூலை 3ம் தேதி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
[6/10, 07:23] sekarreporter1: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, நாய்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களது மனுவில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளிவிவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைபடுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்ட நீதிபதி, வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து தான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதேசமயம் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் என கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாய்கள் இனப்பெருக்கம் சம்பந்தமாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திவருவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[6/10, 07:23] sekarreporter1: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் இன்று ஐந்தாவது நாளாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு, ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டியதை எதிர்த்த வழக்குகள் குறித்து விளக்கி வாதங்களை முன் வைத்தார்.

கடந்த 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை துவங்கியது முதல் 2017 வரை கட்சியை பொதுச்செயலாளர் தான் நிர்வகித்ததாகவும், இடையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை அமலில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்கள் குறித்து அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்ததாகவும், 10 மாதங்களுக்கு பின் அந்த திருத்தங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கட்சி நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவது என கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வந்ததன் மூலம் கட்சி அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

கட்சி துவங்கியது முதல், 2017 வரை பொதுச் செயலாளராக போட்டியிட உறுப்பினராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது எனவும், தற்போது கட்சியின் அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்றவர்கள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட முடியும் என்ற வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

திமுக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டதால் பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தான், பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்றும் வாதிட்டார்.

இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அவை அமல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், கட்சி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் நுழைந்ததை அத்துமீறல் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவரது வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
[6/10, 07:23] sekarreporter1: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜய்பாஸ்கர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[6/10, 07:24] sekarreporter1: ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன் லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத்தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, ஜூன் 4ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதை ஏற்று பதில்மனு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஜூலை 3ம் தேதி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
[6/10, 07:24] sekarreporter1: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, நாய்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களது மனுவில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளிவிவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைபடுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்ட நீதிபதி, வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து தான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதேசமயம் வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் என கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாய்கள் இனப்பெருக்கம் சம்பந்தமாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திவருவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[6/10, 07:24] sekarreporter1: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் இன்று ஐந்தாவது நாளாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு, ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டியதை எதிர்த்த வழக்குகள் குறித்து விளக்கி வாதங்களை முன் வைத்தார்.

கடந்த 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை துவங்கியது முதல் 2017 வரை கட்சியை பொதுச்செயலாளர் தான் நிர்வகித்ததாகவும், இடையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை அமலில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்கள் குறித்து அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்ததாகவும், 10 மாதங்களுக்கு பின் அந்த திருத்தங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கட்சி நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவது என கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வந்ததன் மூலம் கட்சி அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

கட்சி துவங்கியது முதல், 2017 வரை பொதுச் செயலாளராக போட்டியிட உறுப்பினராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது எனவும், தற்போது கட்சியின் அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்றவர்கள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட முடியும் என்ற வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

திமுக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டதால் பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தான், பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்றும் வாதிட்டார்.

இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அவை அமல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், கட்சி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் நுழைந்ததை அத்துமீறல் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவரது வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

  • [6/9, 12:39] sekarreporter1: Hence, the impugned final report is liable to be quashed. Accordingly, Criminal Original Petition is allowed. Consequently, the connected miscellaneous petitions are closed. 07.06.2023 Index    : Yes/No Internet : Yes/No Speaking Order/Non Speaking Order Neutral Citation Case: Yes/No dk To The Metropolitan Magistrate for the exclusive trial of CCB Cases and CBCID Cases,     Egmore,     The Public Prosecutor High Court of Madras     Chennai – 600 104. SUNDER MOHAN, J. dk Pre-delivery order in Crl.O.P.No.6357 of 2021 and Crl.M.P.Nos.4258 and 4249 of  2021 07.06.2023 https://sekarreporter.com/hence-the-impugned-final-report-is-liable-to-be-quashed-accordingly-criminal-original-petition-is-allowed-consequently-the-connected-miscellaneous-petitions-are-closed-07-06-2023-index/
    [6/9, 14:45] sekarreporter1: sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1667044432200486913?t=XQ6fYfvIQQDpjVmF0G5_fw&s=08 [6/9, 14:43] sekarreporter1: [6/9, 14:37] sekarreporter1: Can Tamil Nadu temples appoint Archakas, on the basis of certificates issued by chief priests, even before a court appointed committee identifies Agamic & non Agamic temples? Justice N Anand Venkatesh of #MadrasHC to decide the issue on June 19. https://sekarreporter.com/sekarreporter1-https-twitter-com-sekarreporter1-status-1667044432200486913txq6fyfviqqdpjvmf0g5_fws08-6-9-1443-sekarreporter1-6-9-1437-sekarreporter1-can-tamil-nadu-temples-appoint-arc/
  • sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1667168567299547137?t=Hg-zVf2NyTKdctULSS7uwg&s=08 [6/9, 19:26] sekarreporter1: [6/9, 17:20] Murugan Ravi: Out of the rightful indignation evoked by the events that took place on 18th February, 2017, in connection with the Confidence Motion in the floor of the State Assembly, Senior Advocate Mr.K.Ravi, as Party-in-person, filed a Public Interest Litigation, W.P. No. 4869 of 2017, challenging the said proceedings. cj bench order. we appreciate the anxiety of the learned advocate (party-in-person), as the relief claimed would not matter now. We are not inclined to consider the matter on merits. Accordingly, the writ petition stands disposed of. There will be no order as to costs. (S.V.G., CJ.)                         (P.D.A., J.) https://sekarreporter.com/sekarreporter1-https-twitter-com-sekarreporter1-status-1667168567299547137thg-zvf2nytkdctulss7uwgs08-6-9-1926-sekarreporter1-6-9-1720-murugan-ravi-out-of-the-rightful-indignation-evok/

You may also like...