Madras high court news october 3 neet case aquital news

[10/3, 15:27] Sekarreporter1: கும்பகோணம் அருகில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 13 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட10 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை துவங்காமலும், விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தாமலும் தாமதித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

சாட்சிகள் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை கீழமை நீதிமன்றம் புறக்கணித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தனர்.

தாமதமில்லாமல் பாதுக்காக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும், மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புத்த மாட்டோம் என கூறிய குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி, ஜாமீன் கேட்க முடியாது என கூறி, 10 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[10/3, 15:27] Sekarreporter1: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி….

சாட்சிகளின் விசாரணையை விரைந்து முடிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி…

மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட ராமலிங்கம் 2019 பிப்ரவரி 5ல் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு…

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு
[10/3, 15:50] Sekarreporter1: நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் 65மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதால், தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால் விடைத்தாளை விசைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[10/3, 17:31] Sekarreporter1: சுங்கவரி ஏய்ப்பு முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்க 10 லட்சம் ரூபாயும், ஆப்பிள் ஐ பேடும் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, வருவாய் புலனாய்வு இயக்குனரக கூடுதல் இயக்குனர் ராஜனை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக 2012ம் ஆண்டு சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சோதனைகளை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது. அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதேபோல சூப்பர் கிங்ஸ் மியாட்சின் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க கோரி அந்நிறுவனத்தின் சார்பில் ஃபரூக் உபைத்துல்லா என்பவர், வருவாய் புலனாய்வு இயக்குனரக கூடுதல் இயக்குனராக இருந்த சி.ராஜனை அணுகியுள்ளார்.

அதற்கு, 10 லட்சம் ரூபாயும், ஆப்பிள் ஐ பேடும் லஞ்சமாக கேட்டதாகவும், முந்தொகையாக 2 லட்சம் ரூபாயும், ஐ பேடும் பெற்ற ராஜன் மற்றும் அவரது டிரைவர் முருகேசனை சி.பி.ஐ. கைது செய்தது.

இருவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெஹபூப் அலிகான், வழக்கில் சிபிஐ கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, ராஜனையும், அவரது டிரைவர் முருகேசனையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
[10/3, 17:31] Sekarreporter1: தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்ததால், பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேமா, மருர்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி விண்ணப்பித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் வழங்க மறுத்து புதுச்சேரி தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ஹேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் 90 சதவீதத்தினருக்கு, பிறந்தது ஓரிடமாகவும், பணியாற்றுவது வேறிடமாகவும் இருப்பதாகவும், தனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரி தான் தனது பிறப்பிடம் எனவும் அது மாறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு சான்றுகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிடவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மருத்துவ மேற்படிப்பில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும், அவரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[10/3, 17:31] Sekarreporter1: நகைக்கடை உரிமையாளரிடம் வாங்கிய ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் கடனுக்காக கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பியதால், காசோலையை கொடுத்தவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ரவீந்திரன் கடந்த 2003 ஆம் ஆண்டு அந்த தொழிலை கைவிட்ட நிலையில், அவரிடம் சென்னையை சேர்ந்த ஏ.எல்.குமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

இதற்காக அவர் ஆறு காசோலைகள் மற்றும் ஆறு கடன் உத்தரவாத பத்திரங்களை (Promissory Notes) கொடுத்துள்ளார். அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் அனைத்தும் 2017ஆம் ஆண்டு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் ஏ.எல்.குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை ரவீந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தன்னை ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கில் செயல்பட்டுள்ளதால், தொகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் எனவும், மோசடி செய்ததற்கு உரிய தண்டனை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், ஏ.எல்.குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு எதிராக தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் சேர்த்து 6 மாத சிறை தண்டனையும், மொத்தமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் கடன் தொகையையும் இரண்டு மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் ஏ.எல்.குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அப்போது தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
[10/3, 17:32] Sekarreporter1: Please press senior advocate ARL sundaresan sir request press print and TV media not to publish his father name ARLakshmanan in saitha petai court order in cheque bounce case

You may also like...