Madras high court news round up date 2/6/2023

 

[6/1, 08:11] sekarreporter1: https://youtu.be/mb9eEc0KGgw
[6/1, 08:14] sekarreporter1: Today hc மியூசியம் ag bar council chairman amalraj mhaa mohanakrishnan mba kamalnathan wla Louisal ramesh law association president selvaraj
[6/1, 16:56] sekarreporter1: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இறக்குமதி செய்த மசராட்டி காரின் நுழைவு வரிக்கு விதிக்கப்பட்ட 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு முதல் நுழைவு வரியிடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என ஹாரிஸ் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நுழைவு வரி நீங்கலாக, 44 மாதங்களுக்கான அபராதமாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தும்படி தமிழக போக்குவரத்து துறை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், காருக்கான நுழைவு வரியை ஏற்கனவே செலுத்தி விட்டதாகக் தெரிவித்தார்.

மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தனக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது எனவும் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
[6/1, 16:56] sekarreporter1: தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்த வழக்கை முடித்து வைத்தது.

சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டு தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவ்வாறு இருக்க கூடிய மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது, மருத்துவ படிப்பில் 7 இடங்களும், மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பில் 6 இடங்களும், ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பில் ஏழு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடஒதுக்கீடு வழங்கிய நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.வி. பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பிளீடர் முத்துக்குமார், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து பதிலளிக்கப்பட்டு விட்டதாகவும் தெதிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[6/1, 16:56] sekarreporter1: தமிழக கோவில்களின் நிதியையும், சொத்துக்களையும் தவறாக பயன்படுத்தும் அறநிலைய துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்திருந்த இந்த பொது நல மனுவில், கோவில்களின் நிதியை, கோவில் பயன்பாடு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், கோவில் சொத்துக்கள் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த முறைகேடுகளில் தொடர்புடைய அறநிலையத் துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும், கோவில் நிதி, சொத்துக்களை மீட்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மனு மீதான விசாரணையை, கோவில்கள், அறநிலையத் துறை சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
[6/1, 16:57] sekarreporter1: பாலுடன் கலந்த சர்க்கரை போல

தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவேன்

புதிய தலைமை நீதிபதி பேச்சு
சென்னை,ஜூன். 1-
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதிகளாக எம்.துரைசாமி, டி. ராஜா ஆகியோர் அடுத்தடுத்து பதவி வகித்தனர். டி ராஜா அண்மையில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நடந்தது. புதிய தலைமை நீதிபதியை அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் மோகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேசினர்.
இதற்கு நன்றி தெரிவித்து புதிய தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா பேசிதாவது:-
“தமிழ்நாடு நீதித்துறை ஏராளமான சட்ட அறிஞர்களையும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளையும், நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளையும் உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட உயர்ந்த நீதித்துறையில் நான் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். பெர்சியாவில் இருந்து பார்சி மக்கள் குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினார்கள். அப்போது, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் ஒரு டம்பர் நிறைய பாலை வைத்து காட்டி, உங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று பார்சி மக்களிடம் கூறினார். உடனே அந்த பார்சி மக்களின் தலைவர் ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து பாலில் கலந்து பாலுடன் கலந்த சர்க்கரை போல உங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து வாழ்வோம் என்றார். இதுபோல தமிழ்நாடு மிக உயர்ந்த கலாச்சாரமும் பாரம்பரியமும் கொண்டது. அந்த கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைந்து உங்களில் ஒருவராக நான் இந்த மாநிலத்தில் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
[6/1, 18:03] sekarreporter1: கோவில் தேர் நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமணம் மண்டபத்தை இடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட கோரி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் தேர் நிறுத்துமிடமான, 694 சதுர அடி நிலத்தை ராமமூர்த்தி என்பவரும், அவருடைய மனைவி லலிதாவும் ஆக்கிரமித்து, மூன்று மாடிகளில் லலிதாம்பிகை திருமண மண்டபம் என்ற பெயரில் திருமண மண்டபமும், 10 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி வாடகைக்கு விட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் நோட்டீஸ்கள் அனுப்பியும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தேர் நிறுத்தும் இடத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜராகினார்.

இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு அறநிலைத்துறையில் நாளை விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு மீது நாளைய முடிவு எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[6/1, 20:38] sekarreporter1: #MadrasHC CJ SV Gangapurwala & Justice PD Audikesavalu dispose of a PIL seeking a direction to increase sports quota in govt educational institutions. CJ says it’s a matter of govt policy decision and beyond the purview of writ jurisdiction of the High Court. @THChennai
[6/1, 21:37] sekarreporter1: Sir tomorrow at 2pm honble rmdj and pdaj wil deliver orders in the review matters filed by the government against suo Motu wp 574 of 2015
[6/1, 21:37] sekarreporter1: [6/1, 21:37] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1664302301773987840?t=PVLn34_Zs93Bpp-Nxbej8Q&s=08
[6/1, 21:37] tomorrow at 2pm honble rmdj and pdaj wil deliver orders in the review matters filed by the government against suo Motu wp 574 of 2015
[6/1, 21:37] sekarreporter1: Sir Tomorrow morning at 10.30am honble rmdj and msqj will deliver judgment regarding TET matters.
[6/2, 07:01] sekarreporter1: கோவில் தேர் நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமணம் மண்டபத்தை இடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட கோரி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் தேர் நிறுத்துமிடமான, 694 சதுர அடி நிலத்தை ராமமூர்த்தி என்பவரும், அவருடைய மனைவி லலிதாவும் ஆக்கிரமித்து, மூன்று மாடிகளில் லலிதாம்பிகை திருமண மண்டபம் என்ற பெயரில் திருமண மண்டபமும், 10 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி வாடகைக்கு விட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் நோட்டீஸ்கள் அனுப்பியும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தேர் நிறுத்தும் இடத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜராகினார்.

இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு அறநிலைத்துறையில் நாளை விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு மீது நாளைய முடிவு எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...