Madras high court orders 14feb ஐகோர்ட் உத்தரவுகள்

[2

[2/14, 06:54] Sekarreporter 1: Justice R Subramaniyam. -order if agreement – oral or written expired before new Act came into force then eviction can be filed under new act only on one ground i.e failure to enter into written tenancy agreement as required by new act. ie Section 21(2)(a) https://sekarreporter.com/justice-r-subramaniyam-order-if-agreement-oral-or-written-expired-before-new-act-came-into-force-then-eviction-can-be-filed-under-new-act-only-on-one-ground-i-e-failure-to-enter-into-written-tenan/
[2/14, 06:54] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493033023092113408?t=sVG5n2SzPhd88sJ3HwZw7A&s=08
[2/14, 07:00] Sekarreporter 1: TN Tenant New Act Land mark Judgement of Justice R Subramaniyam Mhc adv PB Balaji super interview https://sekarreporter.com/tn-tenant-new-act-land-mark-judgement-of-justice-r-subramaniyam-mhc-adv-pb-balaji-super-interview/
[2/14, 07:25] Sekarreporter 1: Send ur legal question advocates are ready to answer சட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் பதில. அளிக்க வக்கீல்கள் தயார் https://sekarreporter.com/send-ur-legal-question-advocates-are-ready-to-answer-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%99/
[2/14, 07:28] Sekarreporter 1: bench comprising Justices Sanjay Kishan Kaul and MM Sundresh rejected an argument raised in a case that the minority view in Union of India vs. V. Sriharan – (2016) 7 SCC 1 should be looked into as two of the Judges opined one way in the Constitution Bench. https://sekarreporter.com/bench-comprising-justices-sanjay-kishan-kaul-and-mm-sundresh-rejected-an-argument-raised-in-a-case-that-the-minority-view-in-union-of-india-vs-v-sriharan-2016-7-scc-1-should-be-looked-into-as-tw/
[2/14, 07:37] Sekarreporter 1: Acting Chief Justice Munishwar Nath Bhandari and Justice PD Audikesavalu followed the previous judgments by Allahabad and Delhi High Courts and held that the procedure contemplated under the amended provisions from Sections 147-151 of the Act ought to have been followed for the issue of reassessment notices. https://sekarreporter.com/acting-chief-justice-munishwar-nath-bhandari-and-justice-pd-audikesavalu-followed-the-previous-judgments-by-allahabad-and-delhi-high-courts-and-held-that-the-procedure-contemplated-under-the-amended-p/
[2/14, 09:27] Sekarreporter 1: [2/14, 09:26] Sekarreporter 1: [2/14, 09:06] Sanjai Gandhi Dmk Advt: நிமிர்ந்த நன்னடை-நேர்கொண்ட பார்வை- யாருக்கும் அஞ்சாத- நீதி வழங்கிய நீதிபதி ரவிராஜபாண்டியன் – அவர்களால் ஈர்க்கப்பட்டு – அவர் மீது தொடர்ந்து அன்பு காட்டியவன். இவரின் பேரிழப்பு- மிகவும் துயரத்தில் ஆகிறேன். -சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி [2/14, 09:23] Sekarreporter 1: நிமிர்ந்த நன்னடை-நேர்கொண்ட பார்வை- யாருக்கும் அஞ்சாத- நீதி வழங்கிய நீதிபதி ரவிராஜபாண்டியன் – அவர்களால் ஈர்க்கப்பட்டு – அவர் மீது தொடர்ந்து அன்பு காட்டியவன். இவரின் பேரிழப்பு- மிகவும் துயரத்தில் ஆகிறேன். -சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி https://sekarreporter.com/2-14-0906-sanjai-gandhi-dmk-advt-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%87/
[2/14, 09:26] Sekarreporter 1: Justice Ravirajapandiyan passed away..
[2/14, 12:06] Sekarreporter 1: [2/14, 12:03] Sekarreporter 1: Supreme Court refuses to stay the CBI investigation into the transfer to CBI but issues notice to the part to expunge the remarks of single Judge of the Madras HC casting aspersions on TN police returnable by 4 weeks. [2/14, 12:03] Sekarreporter 1: . https://sekarreporter.com/2-14-1203-sekarreporter-1-supreme-court-refuses-to-stay-the-cbi-investigation-into-the-transfer-to-cbi-but-issues-notice-to-the-part-to-expunge-the-remarks-of-single-judge-of-the-madras-hc-castin/
[2/14, 15:54] Sekarreporter 1: Lavanya case Mr. Mukul Rohatgi & Mr. P. Wilson appeared for the Police and submitted that the HC’s order was illegal on account of the following: https://sekarreporter.com/lavanya-case-mr-mukul-rohatgi-mr-p-wilson-appeared-for-the-police-and-submitted-that-the-hcs-order-was-illegal-on-account-of-the-following/
[2/14, 16:11] Sekarreporter 1: https://youtu.be/iLs0XTEadK4
[2/14, 16:20] Sekarreporter 1: https://youtu.be/a5FSk1rqMWo
[2/14, 18:09] Sekarreporter 1: https://youtu.be/mUiAWb24ywg
[2/14, 18:43] Sekarreporter 1: [2/14, 18:42] Sekarreporter 1: https://youtu.be/5LVxhGygRvE
[2/14, 18:42] Sekarreporter 1: வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிப்பதற்கும் எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
[2/14, 19:22] Sekarreporter 1: https://youtu.be/zhfODIhSkSA
[2/14, 20:34] Sekarreporter 1: “ In a rare judgment of its kind, Justice R Subramanian has dismissed the original suit along with application under Or.33 CPC as a pauper- as abuse of process of law” full order. For Appellant : Mr.Ashok Menon For Respondent : Mr.Vijayakumar for R1 & R2 Mr.M.Bindran, AGP for R3 J U D G M E N T Challenge in this appeal is to the order of the trial court, https://sekarreporter.com/in-a-rare-judgment-of-its-kind-justice-r-subramanian-has-dismissed-the-original-suit-along-with-application-under-or-33-cpc-as-a-pauper-as-abuse-of-process-of-law-full-order-f/
[2/14, 21:59] Sekarreporter 1: THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.22307 of 2013 Gnanaloussany Valmy …Petitioner Vs. The Registrar of Marriages District Registrar, Mylapore – Chennai-28. Mr.V.Raghavachari For Respondent : Mr.R.Neelakandan Additional Advocate General Assisted by Mr.R.P.Murugan Raja Government Advocatefull order https://sekarreporter.com/the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-no-22307-of-2013-gnanaloussany-valmy-petitioner-vs-the-registrar-of-marriages-district-registrar-mylapore-chennai-28-mr-v-raghavachari-for-respo/

/14, 11:59] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை வ்ழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி வகித்த போது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோவில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது, விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என்பன போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது பதவிப்பிரமாணம் செய்து வைக்க தலைமை நீதிபதியோ, மூத்த நீதிபதியோ இல்லாததால், தமிழக ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தானில் பிறந்தவர்.

ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஷ்வர் நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
[2/14, 12:08] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை வ்ழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி வகித்த போது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோவில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது, விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என்பன போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது பதவிப்பிரமாணம் செய்து வைக்க தலைமை நீதிபதியோ, மூத்த நீதிபதியோ இல்லாததால், தமிழக ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தானில் பிறந்தவர்.

ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஷ்வர் நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
[2/14, 12:48] Sekarreporter 1: சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைத்தார்ர்கள் முறைபடுத்துதல் சட்டத்தின் கீழ் வாடகை ஒப்பந்ததை முறைப்படி பதிவு செய்யவில்லை என்றால் வாடகைதார்ரை காலிசெய்ய சிவில் நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
 
தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைத்தார்ர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைபடுத்துதல் சட்டம்  கடந்த 2017 தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.ஆனால் இந்த இந்த சட்டம் 2019  பிப்ரவரி மாதம்தான் அமலுக்கு வந்த்து.இந்த சட்டத்தின் கீழ்  11 மாதம் வரையிலான வீட்டு வாடகை ஒப்பந்தத்தை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள  வாடகை அதிகாரியிடம் பதிவு செய்யவேண்டும், ஆன்லைன் வாயிலாகவும் பதிவு செய்யலாம்..மேலும் இதற்காக வாடகை நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளது..12 மாதத்திற்குமேல் வாடகை ஒப்பந்தம் இருந்தால், வாடகை அதிகாரியிடம் மட்டுமல்லாமல் பத்திரப்பதிவு அலுவலத்திலும் பத்திர பதிவு செய்யவேண்டும்,இந்தநிலையில்,…சென்னை சேர்ந்த முருகானந்தம் உள்ளிட்ட ஆறு  பேர் வாடகை ஒப்பந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்றது.மனுதார்ர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி  வாதிட்டார்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியம் புதிய சட்டம்  அமலுக்கு வரும் முன்பே வாய்மொழியான வாடகை ஒப்பந்தமோ, எழுத்துபூர்வமான வாடகை ஒப்பந்தமோ காலவதி ஆகியிருந்தால்,  புதிய சட்டம் பிரிவு 21 ன் கீழ் வாடகைதார்ரை  காலி  செய்ய புது சட்டத்தில் வாடகை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.

புதிய சட்டம்  அமலுக்கு வரும் முன் எழுத்தபூர்மான வாடகை ஒப்பந்தம் இருந்தும் சட்டம் அமலுக்கு வந்த பின் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆகியிருந்தால் வாடகை பாக்கி, உள்வாடகை பிரச்சனை, ஒப்பந்தம் ஏற்படுத்த தவறியது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வாடகைதாராரை காலி செய்யவும் வாடகை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்..
புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்,வாய்மொழியான ஒப்பந்தம் இருந்தாலும்  சிவில் நீதிமன்றத்தைதான் வீட்டு உரிமையாளர் அணுகி  வாடகைதார்ரை காலி செய்ய வழக்கு தொடர முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.
[2/14, 13:25] Sekarreporter 1: தமிழகத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானிய விலையில் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு 2021 -22ம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை தற்போது லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உள்ளதாகவும், ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளதாக கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்த போதும், அதன் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் உள்ளூர் செஸ் வரிகளை மாநில அரசு விதிப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், பீஹார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலத்தில் மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க கோரி மத்திய – மாநில அரசுகளுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே விவசாயிகளுக்கு
மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை அரசு, மானிய விலையில் வழங்கி வருவதாகவும், பெட்ரோல் – டீசலை மானிய விலையில் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இதுசம்பந்தமாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[2/14, 14:05] Sekarreporter 1: தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அளித்த கோரிக்கை மனுவை இரு நாட்களில் மறுபரிசீலனை செய்யும்படி, கோவை மாநக்ராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாநகராட்சியில், ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் கோவை மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் அளித்த மனு மீது எவ்வித பதிலும் அளிக்காமல், அலைகழிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, பணம் கொடுத்து வாக்குகள் பெறுவது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும், அதை கண்காணிக்கிறீர்களா என கேள்வி எழுப்பியது.

தற்போது பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மனுதாரரின் கோரிக்கை மனுவை இரு நாட்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[2/14, 16:53] Sekarreporter 1: டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,
டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகளும், கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, திருத்த விதிகளை தாக்கல் செய்தார்.

ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் அந்த திருத்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்து வைத்தனர்.

முன்னதாக, குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான் மூலமாக மதுபானங்கள் கொண்டு செல்லப்படுவதாக கூறிய நீதிபதிகள், அதேபோல ஒரு கிராமத்தில் கடை துவங்க எதிர்ப்பு தெரிவித்தால், அருகில் உள்ள கிராம கடைகளுக்கு செல்வர் எனும் போது கிராம சபை அல்லது பஞ்சாயத்துக்கள் தீர்மானத்தின் மீது எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்தனர்.
[2/14, 17:14] Sekarreporter 1: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை கண்காணிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா தாக்கல் செய்த மனுவில், புதிய நிர்வாகிகளை தேர்ந்ததெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால் ஜனவரி 20ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை சென்னை மாநகர காவல்துறை நிராகரித்தாகவும், எனவே உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கும், தேர்தலை நடத்த அனுமதி வழங்குமாறு சுகாதார துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிடுமாறும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பார்வையாளரை நியமுக்க தொழிலாளர் நலத்துறைக்கும் உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், அனுமதி வழங்கினால் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது

இதனையடுத்து காவல்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
[2/14, 17:35] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா சங்க தலைவர் செங்குட்டுவன் அகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.

வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிபரிபாலனம் வழங்குவதிலும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைவர் தரப்பிலும் தெரிவித்தனர்.

பின்னர் ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, பாரம்பரியமிக்க நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 32 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.

பதவியேற்ற கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர்கள், சக நீதிபதிகள் என அனைத்து தரப்பு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க அவை உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.

வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிப்பதற்கும் எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

You may also like...