Madras high court orders december 28 th

[12/27, 12:36] Sekarreporter 1: கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு, மறு நியமனம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அவர்களின் சேவை தேவையில்லை என்பதால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், மறு நியமனம் மறுத்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், கல்வியாண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்குவது தொடர்பாக 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என உயர் நீதிமன்றம், ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
[12/27, 13:34] Sekarreporter 1: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேன்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த ஜெ.கிருஷ்ணகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே பல்லடம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்திற்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய பொள்ளாச்சி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலை துறைதுறை தரப்பில் 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் சம்பதப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, அதன்பின்னர் ஆக்கிரமிப்ப்களை 8 வாரங்களில் அகற்ற வேண்டுமெனவும், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் அந்த நடவடிக்கை தொடர்பாக விவரங்களை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தாவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
[12/27, 17:16] Sekarreporter 1: அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, மன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கு அனுமதியளித்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்குக்கு குறையாத எண்ணிக்கையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும், மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ள இந்த தீர்மானம் சட்டப்படி செல்லாது எனக் கூறியிருந்தார்.

இதை ஏற்ற உயர் நீதிமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற மன்றக் கூட்டத்தை கூட்ட அனுமதியளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, கடந்த நவம்பர் 15ம் தேதி மனு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மன்றக் கூட்டத்தை கூட்ட அனுமதியளித்ததாகவும் கூறி, அரசுத்தரப்பில் தடையை நீக்க கோரி ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கடந்த நவம்பர் 15ம் தேதி 8 உறுப்பினர்கள் அளித்த தீர்மானத்தின் அடிப்படையில் ஏழு நாட்களில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு மனுதாரர் பதிலளித்தாலும், இல்லாவிட்டாலும், தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[12/27, 17:36] Sekarreporter 1: நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான கமுதி முன்சீப் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் என்.முனியசாமிக்கு தடை

ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும் வரை வழக்கறிஞராக தொழில்புரிய முனியசாமிக்கு தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

பாலியல் தொல்லை புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கமுதி ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்

வழக்கறிஞர் சங்க தலைவர் முனியசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்

You may also like...