Madras high court orders feb 2 சென்னை ஐகோர்ட் பிப்ரவரி 2ம் தேதி உத்தரவுகள்

[2/1, 16:33] Sekarreporter 1: [2/1, 11:46] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ததாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பத்துரை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிடபட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் பிறகு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கடந்த 29ம் தேதி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் காவல்துறையில் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளதால் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்… தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை தமிழக அரசும், டிஜிபியும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அரசு ப்ளீடர் மபெறப்பட்டதால்
ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று விதிக்க வேண்டும் என்றும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
இந்த வழக்கை பொதுநல வழக்காக எடுத்துக்ககொள்ள முடியாது, அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும் உள்ளாட்சித் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு என்பதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர் இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஒரு மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[2/1, 12:32] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மக்கள் தொகை அடிப்படையிலா அல்லது வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம்நிலை நகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், எந்த புள்ளிவிவர ஆதாரங்களும் இல்லாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதித்தால், அது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தையே பாதிக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[2/1, 15:49] Sekarreporter 1: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதுமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இன்று வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதேபோல புகார்தாரரான மிலானி தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை இணைத்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்று விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
[2/1, 16:34] Sekarreporter 1: திண்டிவனத்தை சேர்ந்த திமுகவை சார்ந்த திரு. ரவிச்சந்திரன் என்பவர் திண்டிவனம் முருங்கப்பாக்கம் 8வது வார்டு பெரியாண்டவர் கோவில் தெருவில் நகராட்சியின் எவ்வித அனுமதி பெறாமல் நகராட்சி குடிநீர் தொட்டி என கல்வெட்டு அமைத்து அதில் தன்னை நகராட்சி உறுப்பினர் என்று குறிப்பிட்டிருந்தார் . கடந்த 5 வருடங்களாக நகராட்சி தேர்தலே நடக்காத நிலையில் இவ்வாறு இவர் சித்தரித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கந்து வட்டி வழக்கு மற்றும் இதர வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கல்வட்டை இவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி KS மஸ்தான் அவர்களை வைத்து திறந்து மக்களை ஏமாற்றும் நோக்கில் தன்னை நகராட்சி கவுன்சிலராக பாவித்து வருகிறார். எனவே இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டி அதே பகுதியை சார்ந்த வழக்கறிஞர் ஜகநாதன் என்பவர், அந்த கல்வெட்டை திறந்துவைத்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி KS மஸ்தான் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (01.02.2022) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரனைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், கல்வெட்டை திறந்துவைத்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி KS மஸ்தான், திண்டிவனம் நகராட்சி ஆணையாளர், தலைமை செயலாளர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
[2/2, 17:24] Sekarreporter 1: [2/2, 11:06] Sekarreporter 1: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்த உத்தரவிடக்கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இரண்டு ஆண்டுகள் வழக்கு தொடர தடையும் விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்திருந்த பொது நல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரித்தி வருகிறவதாகவும்,பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும் பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்க கூடாது என அறிவிப்பு பலகையை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலங்களிலும் சிசிடிவி பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்..
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரத்த நீதிபதிகள்,மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
விளம்த்திற்காக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,
அடுத்த 2 வருடத்துக்கு எந்த பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/2, 11:20] Sekarreporter 1: ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க கோரி எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், 2 ஆண்டுகள் பொது நல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாகவும், பிறப்பு முதல் இறப்பு சான்று பெறுவது வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக கூறி, அனைத்து அலுவலகங்களிலும், லஞ்சம் வாங்குவதும்; கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் அந்த மனுவில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகளின் அசையும், அசையா சொத்துக்களை முடக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொதுப்படையான கோரிக்கைகளுடன், எந்த ஆய்வும் நடத்தாமல் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு தடை விதித்த நீதிபதிகள், அபராதத் தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.
[2/2, 11:52] Sekarreporter 1: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளை சேர்ந்த அரசு அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 80 ஆயிரம் காவல்துறையினர், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதிலாக, தேர்தல் முடிந்து விட்ட ஊரக பகுதி அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர், தனது மனுவில், தேர்தலில் பெரும்பாலும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளை தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அளித்த விண்ணப்ப மனுவை பரிசீலிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும், இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தலை ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக பாபு முருகவேல் தரப்பில் கூறியதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடனர்.
[2/2, 12:23] Sekarreporter 1: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்புக்கும்வரை இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரி பாமக முன்னாள் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 10.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்
புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது எனக் கூறி பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாதென பாமக முன்னாள் எம்.எல்.ஏ.காவேரி வையாபுரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை மாணவ சேர்க்கையை ஒத்திவைக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை, ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
[2/2, 13:06] Sekarreporter 1: கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதி பருவத்தேர்வுகள் நேரடியாக ஜூன் – ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்திருந்தார்.

பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆன் லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/2, 16:13] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை இரண்டு வாரங்களில் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஆதுகேசவலு அடங்கிய முழு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு திட்டமும் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக, நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கை கோரியுள்ளதாகவும், அவை கிடைத்த பின் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,
சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

2015ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கில், 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், 5 ஆண்டுகளாக முழுமையாக அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதிகள், குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனர்.

சமநிலையற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இரண்டு வாரங்களில் திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியையோ அல்லது அரசு நிதி ஒதுக்கியோ பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/2, 16:43] Sekarreporter 1: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உட்பட 22 மாநில மொழிகளை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததை ஏற்று, இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில்  வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடக்கோரி மீனவர் அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கு, 22 மாநில மொழிகளில் வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[2/2, 16:59] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கான டெண்டருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கோரியுள்ள கடிதம் மீது 2 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாகவும்,
பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீதி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு,
நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி, டெண்டருக்கு அனுமதி கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு
கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து
2 நாட்களுக்குள் டெண்டருக்கு அனுமதி கோரிய கடிதம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அனுமதி பெற்ற பிறகு 10 நாட்களுக்குள் டெண்டர் நடவடிக்கையை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்
அடுத்த முறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விலக்கு அளித்துள்ளனர்
[2/2, 17:09] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உள்ள நகராட்சி குடிநீர் தொட்டியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ்.மஸ்தான் வைத்து திறந்தாகவும், பிறகு அங்கு உள்ள கல்வெட்டில் தன்னை எட்டாவது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பெறிக்கபட்டதாகவும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுத்துள்ளது.

சட்டத்திற்கும், விதிகளுக்கு புறம்பாக அரசு தண்ணீர் தொட்டியில் வார்டு உறுப்பினர் என கூற ரவிச்சந்திரன் பெயர் பலகை வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த மாதம் 10 தேதி தான் தமிழக அரசு மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனது புகார் மீது கால வரையறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, தமிழக அரசு, திண்டிவனம் நகராட்சி ஆணையர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[2/3, 07:45] Sekarreporter 1: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு
சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியலை கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்த்து. சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து
கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பட்டியல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளார்….

You may also like...