Madras high court orders january 13th day ஐகோர்ட் உத்தரவுகள்

[1/11, 11:02] Sekarreporter 1: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி எஸ்.ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் மத்தியத அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து திமுக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அவகாசம் கோரினார்.

இதையடுத்து பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[1/11, 12:06] Sekarreporter 1: கடந்த 2006- 2014ம் ஆண்டுக்கு இடையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கூறி ஈஷா அறக்கட்டளை எதிராக விசாரணை..

சுற்றுச்சூழல் துறை பொறியாளர் விசாரணை
நோட்டீஸ்….

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் வழக்கு…

எந்த ஒரு உரிய விளக்கமும் கேட்கவில்லை என்றும், உள்நோக்கத்துடன் புதிய அரசு செயல்படுவதாக மனு…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரணை…

நோட்டீஸ் மீது இடைக்காலமாக நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவு…

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க உத்தரவு….
[1/11, 12:07] Sekarreporter 1: ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் தள்ளிவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில்மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார்..
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதேபோல, முன் கூட்டி விடுதலை கோரி இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவும் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[1/11, 12:14] Sekarreporter 1: கோவை ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் மேற்கொண்டதாக கூறி அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை சி.ஆர். தினேஷ் ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தங்கள் வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் முதல் 2012 ஆம் ஆண்டு வரை 91,519 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு, உண்டு உறைவிட பள்ளி, யோகா பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிட்டு விதிகளின் படி அனுமதி பெறமால் கட்டப்பட்டுள்ளதாக கூறி மேற்கொண்டு கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டதாகவும், அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிகளின் படி கல்வி நிலையங்கள் என்ற அடிப்படையில் எற்கனவே விலக்கு கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2014க்கு முன்பும் மற்றும் பின்பும் என கட்டிடங்களை இருவகையாக பிரித்ததாகவும், கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என தங்களுக்கு விலக்கு கோரி விண்ணப்பித்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த நவம்பர் 19ஆம் தேதி, விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் மையத்திற்கு எதிரான நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், 2014ஆம் ஆண்டு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும்,
கோரிக்கை வைக்கப்படிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டார், நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், ஏற்கனவே சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் முன் தேதியிட்டு அமல்படுத்துவதாக குறிப்பிடப்படாத நிலையில், அதற்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்தனர்.
[1/11, 12:48] Sekarreporter 1: மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதையும் கருத்தில் கொண்டே சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை முன்வைக்க மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்குகளின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேற்கொண்ட எந்த தரப்பிற்கும், எந்த காரணத்திற்காகவும் அவகாசம் வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
[1/11, 15:26] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும்.

ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மொத்த இடங்களில்தான் வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக்கூடாது என்றும், பெண்களுகு வழங்குவதை எதிர்க்கவில்லை என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சென்னையை பொறுத்தவரை மத்திய பகுதியில்தான் பெண்கள் அதிகம் என்றும், புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியலைமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென என்பதால் அதை மீறக்கூடாது என தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை என்பதால், 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும், ஆனால் அது மொத்த வார்டுகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமென கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
[1/11, 16:53] Sekarreporter 1: பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் பல மிரட்டல்கள் வருவதாகவும், வழக்குகளில் சரணடைய தனது கணவர் தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அச்சப்படும்வகையில் என்கவுன்டர் திட்டம் ஏதும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரபட்ட வழக்கு என கூறி, எல்லாமாளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[1/11, 17:01] Sekarreporter 1: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழுடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாய பாடமாக சேர்க்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக முஸ்லிம்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தமிழ் முதல் பாடமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்றால், அந்த மொழி மெல்ல அழிந்து விடும் – மனு

பத்தாம் வகுப்பு தேர்வில், சிறுபான்மை மொழி பாடத் தேர்வு எழுத 2022 மார்ச் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம்

இதேபோன்ற வழக்கில் 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் தொடர முடியும் – நீதிபதிகள்
[1/11, 17:01] Sekarreporter 1: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழுடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாய பாடமாக சேர்க்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முஸ்லிம்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மட்டுமல்லாமல், மொழிச்சிறுபான்மை மாணவர்கள், தங்கள் தாய்மொழி பாடத்தையும் சேர்க்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுசம்பந்தமாக இரு மாதங்களில் அரசு ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தமிழ் முதல் பாடமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்றால், அந்த மொழி மெல்ல அழிந்து விடும் என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பத்தாம் வகுப்பு தேர்வில், சிறுபான்மை மொழி பாடத் தேர்வு எழுத 2022 மார்ச் மாதம் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் தொடர வேண்டும் எனவும், அடுத்தடுத்து வழக்குகள் தொடரமுடியாது எனக் கூறி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...