Madras high court orders march 11. ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 11

    [3/11, 06:40] Sekarreporter: What is New? Narasimhan Vijayaraghavan https://sekarreporter.com/what-is-new-narasimhan-vijayaraghavan/
    [3/11, 06:40] Sekarreporter: Madras high court orders march 10 ஐகோர்ட் உத்தரவுகள். மார்ச் 10 https://sekarreporter.com/madras-high-court-orders-march-10-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/
    [3/11, 06:40] Sekarreporter: TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY (TNSLSÄ) PRESS NOTE The Hon’ble Senior Most Judge of Supreme Court of India/Executive Chairman of National Legal Services Authority has directed to hold National Lok Adalats on 2 nd Saturdays of March, May, August, November during the year 2022 https://sekarreporter.com/tamil-nadu-state-legal-services-authority-tnslsa-press-note-the-honble-senior-most-judge-of-supreme-court-of-india-executive-chairman-of-national-legal-services-authority-has-directed-to-hold-nati/
    [3/11, 07:35] Sekarreporter: Justice G. Jayachandran added that though the courts should generally ‘lean upon legitimacy and frown upon bastardy’ [as laid down in Badri Prasad v. Dy. Director of Consolidation and others] it can also not consider a deceased person as responsible for the birth of the minor appellant. Attempts made to obtain the property of a deceased person by claiming parentage must be equally frowned upon, the court remarked. https://sekarreporter.com/justice-g-jayachandran-added-that-though-the-courts-should-generally-lean-upon-legitimacy-and-frown-upon-bastardy-as-laid-down-in-badri-prasad-v-dy-director-of-consolidation-and-others-it-can/
    [3/11, 07:48] Sekarreporter: Justice A.D Jagadish Chandira observed that no act of violence has occurred during the protest and no untoward incident has taken place, which warrants the quashing of the FIR registered against the protesters. Mhc. has quashed an FIR registered against some office bearers and members of ‘Campus Front of India’ who organised a protest in front of IIT-Madras seeking justice for a suicide victim. https://sekarreporter.com/justice-a-d-jagadish-chandira-observed-that-no-act-of-violence-has-occurred-during-the-protest-and-no-untoward-incident-has-taken-place-which-warrants-the-quashing-of-the-fir-registered-against-the-p/
    [3/11, 07:50] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502107024464572419?t=a9w4eimafnl1uGOQ546Qaw&s=08
    [3/11, 08:54] Sekarreporter: https://youtu.be/Q2Vu0-bZKEY
    [3/11, 10:23] Sekarreporter: Justice SM Subramaniam of Madras HC directs Inspector of an All Women Police Station to register a FIR against a Govt aided private school headmaster for sexually harassing two women teachers. Says, Internal Complaints Committee should also hold a parallel inquiry.full order here https://sekarreporter.com/justice-sm-subramaniam-of-madras-hc-directs-inspector-of-an-all-women-police-station-to-register-a-fir-against-a-govt-aided-private-school-headmaster-for-sexually-harassing-two-women-teachers-says-i/
    [3/11, 10:35] Sekarreporter: இரண்டு பெண் ஆசிரியைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். https://sekarreporter.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa/
    [3/11, 10:36] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502148955899006979?t=liqVU40K-xfPJnb2T34-4A&s=08
    [3/11, 11:49] Sekarreporter: [3/11, 11:47] Jothikumar Add Pp Hc: Hon’ble Judge A.D.Jagagadeeshchandira granted bail to Ex-minister D.Jayakumar
    [3/11, 11:48] Sekarreporter: 🍁
    [3/11, 12:56] Sekarreporter: https://youtu.be/CW1_Jk3TNMo
    [3/11, 13:42] Sekarreporter: THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar https://sekarreporter.com/the-honourable-mr-justice-v-parthiban-w-p-no-25568-of-2021-air-corporation-employees-union-regn-no-3905-rep-by-its-president-c-udayashankar-the-honourable-mr-justice-v-parthiban-w-p-no-25568/
    [3/11, 14:00] Sekarreporter: [3/11, 13:59] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502199782252507138?t=0-hNEhvLojINiyvu85lYLQ&s=08
    [3/11, 13:59] Sekarreporter: THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation Employees Union (Regn No. 3905) Rep by its President C.Udayashankar THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN W.P. No.25568 of 2021 Air Corporation https://t.co/6SKzYEjyQd https://t.co/DPycFdJIvi
    [3/11, 14:00] Sekarreporter: [3/11, 13:59] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1502199924556918784?t=5kwp_INncuqaPvC6CY-tTQ&s=08
    [3/11, 13:59] Sekarreporter: Justice V Parthiban of Madras HC
    dismisses a case filed last year by a trade union representing over 5,000 employees of Air India to restrain the Centre from disinvesting the air carrier without assuring their service conditions. https://t.co/qVHBaguStP
    [3/11, 15:21] Sekarreporter: https://youtube.com/shorts/zion5YU6IKs?feature=share
    [3/11, 15:59] Sekarreporter: https://youtu.be/QjlwpBzW8YY
    [3/11, 16:04] Sekarreporter: Sasikala relative bail dismissed https://sekarreporter.com/sasikala-relative-bail-dismissed/
    [3/11, 16:38] Sekarreporter: https://youtu.be/d8ZzFMb8GiI
    [3/11, 16:56] Sekarreporter: [3/11, 16:52] Ranjan MHC adv: முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் க.ஞானப்பிரகாசம் அவர்களின் துணைவியார் சுசிலா அம்மையார் அவர்கள் (வயது 70 )இன்று 11.03.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை 12.03.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
    நெ. 5 சன்னதி தெரு, பூவிருந்தவல்லி.
    [3/11, 16:55] Sekarreporter: .
    [3/11, 18:16] Sekarreporter: Former minister jayakumar bail order copy CORAM THE HONOURABLE MR.JUSTICE A.D.JAGADISH CHANDIRA Crl.O.P.No.5467 of 2022 and Crl.M.P.No.3189 of 2022. For Petitioner : Mr.Sanjay R.Hegde, Senior Counsel Mr.A.Natarajan, Senior Counsel for M/s.I.S.Inbadurai For Respondent : Mr.A.Gokulakrishnan Additional Public Prosecutor For intervenor : Mr.P.Anandan O R D E R https://sekarreporter.com/former-minister-jayakumar-bail-order-copy-coram-the-honourable-mr-justice-a-d-jagadish-chandira-crl-o-p-no-5467-of-2022-and-crl-m-p-no-3189-of-2022-for-petitioner-mr-sanjay-r-hegde-se/
    [3/11, 18:29] Sekarreporter: https://youtu.be/F3fLEdutFZI
    [3/11, 20:31] Sekarreporter: https://youtu.be/XgONZ_aVG4I

    [3/11, 12:00] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீன்வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது.

     முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்,  தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பான வழக்கில்  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

     அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாகும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுங்கட்சியை சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

     முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைதசெய்யப்பட்டு உள்ளாதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
    இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு உமனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது
    காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்க வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை கையெழுத்து எடுத்துக்கொண்டார் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று எடுத்துப் எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தார்ர் தரப்பிலும் ஜாமின் வழங்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முதலமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் அங்கு உள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    [3/11, 12:21] Sekarreporter: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு கடந்த 4ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின் போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இங்கு மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்கும் வாய்ப்புள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், அது தாக்கல் செய்யப்படாததால், தேர்தல் அதிகாதிக்கு எதிராக தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரி இளவரசன் நேரில் ஆஜரானார்.

    மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் 26ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் காவல் துறையினர் தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தங்களை சிறையில் அடைத்து விட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகவும் கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தேர்தல் அதிகாரிக்கு அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    [3/11, 12:21] Sekarreporter: சசிகலா உறவினரான இளவரசி மருமகனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    சேலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடமிருந்து சுமார் 5 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு வாங்கி தராததால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்

    இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் இளவரசியின் மருமகனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்
    [3/11, 12:57] Sekarreporter: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வழக்கு

    மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

    கச்சத்தீவு ஒப்பந்தத்தின் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் மனுவில் தகவல்

    மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களை கைது செய்கிறது – தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி
    [3/11, 13:09] Sekarreporter: திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கடந்த 2015ஆம் ஆண்டு வேளச்சேரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து பேசியதாக அதிமுக அரசு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு எம்.பி எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

    இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தபோது தனி நபர் குறித்து பேசியதற்கு அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த
    ஆர் எஸ் பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்
    [3/11, 13:10] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது மருமகன் நவீன்குமாகும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆகியோர் வாதிட்டனர்.

    புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜெயக்குமார் அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மருமகனுக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னுடைய நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், அடியாட்கள அனுப்பி தன்னை தாக்கிய வீடியோ ஆதாரங்கள் ஏற்கனவே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், ஜெயக்குமார் அடியாட்களை கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், தற்போது விசாரணை முழுமையாக முடியாததால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்கு திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் பின்னர் திங்கட்கிழமை தோறும் விசாரனை அதிகாரி முன்பு ஆஜராகி கைழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
    …..
    [3/11, 13:32] Sekarreporter: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    சென்னை ஐஐடி முதலாமாண்டு மாணவியான கேரளாவை சேர்ந்த பாத்திமா, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாத்திமா தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமனற்த்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் அஷ்ரப், முஸ்தபா உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முற்றுகைப் போராட்டத்துக்கு பின் எந்த அசம்பாவித சம்பவங்களோ, வன்முறையோ நடைபெறவில்லை எனவும், இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆரம்பகட்ட முகாந்திரமும் இல்லை எனவும் கூறி, கேம்பஸ் பிரண்ட்ஸ் அமைப்பு நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
    [3/11, 17:17] Sekarreporter: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டிய்லிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும், இந்திய – இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்தக் கோரியும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்த பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை எனவும், பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும் போது இந்திய அரசு அவர்களை கைது செய்வதாகவும் குறிப்பிட்டார்.

    பின்னர், இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    [3/11, 17:33] Sekarreporter: ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

    இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக் கோரி, ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும், விற்பனை செய்தாலும், ஓய்வு பெறும் வயது வரை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஏர் இந்தியா குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற கூடாது, மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முதலீட்டை பாதுகாக்கவே அது டாடா நிறுவனத்துக்கு விற்கப்படுவதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    பங்கு விற்பனை போன்ற பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு விற்கும் முடிவில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.
    [3/11, 17:33] Sekarreporter: மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரபட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மார்ச் 17ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...