Madras high court orders nov 29

[11/29, 10:07] Sekarreporter 1: ரூ. 206.42 கோடி வரி பாக்கியை வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் மற்றும் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வருமானவரி துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின்போது நடத்தபட்ட வருமான வரித்துறை சோதனையில் வரிபாக்கி கண்டுபிடிக்கப்பட்டது

அரசு நிதிகளை பெறுகின்ற கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை – மனு
[11/29, 10:07] Sekarreporter 1: 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வரிபாக்கிய வசூலிப்பதற்காக தனக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தை முடக்கியும், வங்கிக் கணக்கில் முடக்கியும் வருமானவரி துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில் தான் எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு நாளை மறுநாளைக்குள் பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
[11/29, 10:56] Sekarreporter 1: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத் திறனாளி வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த பொய் புகாரில், தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார்.

தான் மாற்றுத் திறனாளி எனக் கூறிய முருகானந்தத்தை தாக்கியதுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முருகானந்தம் தாக்கல் செய்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் முதுகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்தொகையில் 4 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக கான்ஸ்டபிள் முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
[11/29, 12:43] Sekarreporter 1: தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் தமிழக ஆளுநராக ஆர். என்.ரவி கடந்த ஆண்டு,செப்டம்பர் மாதம் 18 ம் தேதி பதவியேற்றுகொண்டதாகவும், பதவியேற்ற நாளிலிருந்து அவர் ஒரு பிரச்சனைக்குரிய நபராகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்.என். ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 உட்பிரிவு 2 ன் கீழ் ஆளுநர் எந்த ஒரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதையும் மீறி அவர் தலைவராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் . இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே அவர் ஆளுநராக பதவி வைக்க தகுதியற்றவர், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மனுதாரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[11/29, 13:20] Sekarreporter 1: தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

தம்மை பற்றி அவதூறு கருத்துகளை பேச நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அளித்திருந்த ஒரு பேட்டியில் மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும், அதனை அடிப்படையாக கொண்டே புகார் அளித்திருந்தாகவும், எனவே தனது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை செந்தில்பாலாஜி கூறுவது ஏற்புடையதல்ல என்றும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது தமது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் அந்த தடையை நீக்க வேண்டுமெனவும், செந்தில்பாலாஜி வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் நிர்மல் குமார் தனது பதில் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
[11/29, 15:48] Sekarreporter 1: ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி எம் சி மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தரப்பில், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்து கல்லூரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
[11/29, 16:21] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், 2018ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வு பலன்களை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகள் நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவர் எனத் தெரிவித்தார்.

இது ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீத பலன்களை வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, நள்ளிரவில் இரு பெண்கள் வசிக்கும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீடாமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்தும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றொரு வழக்கில் உத்தரவிட்டுள்ளார்.
[11/29, 16:35] Sekarreporter 1: உதகை நகராட்சி ஊழியர்களுக்கான அரசு குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணிக்கம்மாள் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த வழக்கில், துப்பரவு பணியாளர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு அரசு பணியாளர் குடியிருப்பு ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை உதகை நகராட்சி நிர்வாகத்திடம் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனு நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.

அந்த குடியிருப்புகளில் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், நகராட்சி பணியில் இல்லாத வெளியாட்களும் வாடகை கொடுத்து வசித்து வருவதாகவும், அவர்களை வெளியேற்றி தங்களுக்கு குடியிருப்பை ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும், தங்களுக்கு அரசு குடியிருப்பு ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் சரவணன் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை அரசு வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், உதகையைச் சுற்றி நகராட்சி பணியாளர்களுக்காக 376 அரசு குடியிருப்புகள் இருப்பதாகவும், இதில் 106 குடியிருப்புகளில் தற்போதை பணியாளர்களாக இருப்பவர்கள் குடியிருந்து வருவதாகவும், மீதமுள்ள 270 குடியிருப்புகளில் மற்றவர்கள் சட்டவிரோதமாக குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, உதகை நகராட்சிக்கு உள்ளிட்ட அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றி, 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[11/29, 17:28] Sekarreporter 1: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சம்மன்…..

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சதராங்கனி அகியோர் ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015ஆம் ஆண்டில் பதிவு செய்த வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது
[11/29, 17:37] Sekarreporter 1: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கின் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

ஏழு வருட விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[11/29, 18:08] Sekarreporter 1: பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடந்த மாதம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நடிகைகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமமென்ற நிபுந்தனையுடன்
சைதை சாதிக்கிற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
[11/29, 18:27] Sekarreporter 1: எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்

நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு

இரு வழக்குகளும் பிற்பகல் 2:30க்கு தீர்ப்பிற்காக பட்டியலிடப்பட்டுள்ளது

டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய மாநகராட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உள்நோக்கத்துடன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் – வேலுமணி

தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு. முந்தைய அரசும், லஞ ஒழிப்புத் துறையுன் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டன – அறப்போர், திமுக

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் ரூ. 10 கோடி என்பதை ரூ. 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர்.- லஞ்ச ஒழிப்பு துறை
[11/29, 18:27] Sekarreporter 1: டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன.

அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. அறிக்கை அளித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததாகவும், தமிழக அரசும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிட்டப்பட்டது. ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின், பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

மற்றொரு புகார்தாரரான திமுக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார். புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளில் நாளை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

You may also like...