Madras high court orders nov 5

Tks

[11/5, 10:31] Sekarreporter 1: தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தேர்தல் முடிவு செல்லும்.
உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கடந்த 02/11/2021 அன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இது இந்திய ஜிம்னாஸ்ட்டிக்ஸ் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அந்த தேர்தல் முடிவை எதிர்த்து தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க முன்னாள் தலைவர் திரு.பிரபு மற்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர், அதில் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை கோரியும், பொதுக் குழு கூட்ட தடை கோரியும் மற்றும் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தை நிர்வாகிக்க அலுவலர் நியமனம் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. வாழ்க்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. C.V. கார்த்திகேயன் அவர்கள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதுபோன்ற தேவையற்ற மனுக்களால் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப் படுவாதகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் திரு.ரோகபரணி அவர்கள் ஒரு முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் மற்றும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் என்பதாலும்தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் இனிமேல் சிறப்பாக செயல்பட்டு தமிழக வீரர்கள் தேசிய அளவில் பங்கேற்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[11/5, 11:34] Sekarreporter 1: சிதம்பரத்தில் மானவிக்கு சக மாணவன் மஞ்ச கயிறு கட்டிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலான விவகாரம்..

மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி..

மகளை மீட்டுத் தரக்கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல்..

நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியை விடுவித்து தாயிடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் விளக்கம்..

மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு..

[11/5, 12:13] Sekarreporter 1: புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது

சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

ஐ.ஏ.எஸ். அதிகாரியான மோகன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தொடரந்த வழக்கு

புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ,மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர் : தமிழக அரசு அறிக்கை

புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது , உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவு

பொதுமக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் : நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்
[11/5, 12:14] Sekarreporter 1: புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்த்து வந்தவர் வி. மோகன்ராஜ். ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த்போத்ரா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார் .கடனை திருப்பி செலுத்த கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததால் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போதைய தலைமைச் செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் செய்திருந்தார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் போத்ரா கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். பைனான்சியர் போத்ரா மறைவை அடுத்து ,அவரது மகன் ககன்போத்ரா இந்த வழக்கை தொடர்ந்த நடத்தி வந்தார் . வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு இறுதிவிசாரண நடைபெற்றது. அப்போது மனுதாரர் மீது ஏற்கனவே பல மோசடி புகார்கள் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தார். விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன்,
அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் , புகார் குறித்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர் ,சென்னை மாநகர காவல் துறை
ஆணையருக்கு கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ,மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது , உரிய நடவடிக்கையை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுடைய நலன் கருதி, தங்களுடைய கடமைகளை,அரசு அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க கோரி
சில விவரங்களோடு புகார்கள் தரப்பட்டால் அந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால், அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கைபோய்விடும், மேலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமல் தவிர்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் எச்சரித்துள்ளார்.அதிகாரிகள் அதிகப்படியான காலதாமதம் செய்து, அதனால் ,எதிர்காலத்தில் நடவடிக்கைகளை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் புகார்தாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
[11/5, 12:46] Sekarreporter 1: சிதம்பரத்தில் மானவிக்கு சக மாணவன் மஞ்ச கயிறு கட்டிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலான விவகாரம்..

மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி..

மகளை மீட்டுத் தரக்கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல்..

நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியை விடுவித்து தாயிடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் விளக்கம்..

மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு..

[11/5, 12:59] Sekarreporter 1: கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள், நடப்பு 2022- 23ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் கோரியோ, அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப்பிக்கும் போது, பள்ளி கட்டிடத்துக்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் 47 ஏ பிரிவு அமலுக்கு வந்த 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்களுக்கு மீண்டும் கட்டிட அனுமதியோ, திட்ட அனுமதியோ பெறுவது கட்டாயமில்லை எனவும், 2011ம் ஆண்டுக்கு பின் கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என் விளக்கமளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியமில்லை என உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால், அவற்றுக்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுக்களுடன் அதற்கான ஆதாரத்தை இணைத்திருக்க வேண்டும் என தெளிவுபடுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலிக்கவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2011ம் ஆண்டுக்கு பின் பள்ளிகள் எந்த கட்டுமானங்களையும் கட்டியிருக்காவிட்டால், அதுகுறித்த அறிவிப்புடன் அங்கீகாரத்தை நீட்டிக்க கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார்.
[11/5, 13:09] Sekarreporter 1: கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள், நடப்பு 2022- 23ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் கோரியோ, அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியோ விண்ணப்பிக்கும் போது, பள்ளி கட்டிடத்துக்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் 47 ஏ பிரிவு அமலுக்கு வந்த 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்களுக்கு மீண்டும் கட்டிட அனுமதியோ, திட்ட அனுமதியோ பெறுவது கட்டாயமில்லை எனவும், 2011ம் ஆண்டுக்கு பின் கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என் விளக்கமளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2011ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியமில்லை என உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால், அவற்றுக்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுக்களுடன் அதற்கான ஆதாரத்தை இணைத்திருக்க வேண்டும் என தெளிவுபடுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலிக்கவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2011ம் ஆண்டுக்கு பின் பள்ளிகள் எந்த கட்டுமானங்களையும் கட்டியிருக்காவிட்டால், அதுகுறித்த அறிவிப்புடன் அங்கீகாரத்தை நீட்டிக்க கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார்.
[11/5, 15:59] Sekarreporter 1: டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் ,
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க கட்டுப்பாடுகள் உள்ளதாகவும்
எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யவேண்டும் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில்,மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்திருந்த து.டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதால் அரசினுடைய வழிகாட்டுதல்படியே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தது. வழக்கு மீண்டும் நீதிபதிகள், கிருஷ்ணகுமார் தமிழ்செல்வி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மதுவிலக்கு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் டாஸ்மாக் மதுபான கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் திட்டம் தற்போதுவரை ஏதும் இல்லை என்று உறுதியளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[11/5, 17:16] Sekarreporter 1: விதிமீறல் கட்டிடம் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயபாஸ்கர் என்பவர் வழக்கு

மாநகராட்சி ஆணையரை நேரில ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

ஆணையரை நேரில ஆஜராக உத்தரவு பிறப்பிபதற்கு காரணமான மனுதாரரை மிரட்டும் வகையில் மாநாகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்- நீதிபதிகள்

கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல் துறை அதிகாரிகள் யார்? என்ற விவரங்களை நவம்பர் 7ம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு
[11/5, 17:17] Sekarreporter 1: விதிமீறல் கட்டிடத்துக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12 ஆயிரம் சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சொந்தமான தரைதளம் குடியிருப்பு பயன்பாட்டுக்கு அல்லாமல் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி குறிப்பிட்ட கட்டிடம் கட்டிய 1997 ஆம் ஆண்டு முதல் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்ட பிறகு திடீரென விழித்துக் கொள்ள காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிப்பதற்கு காரணமான மனுதாரருக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல் துறை அதிகாரிகள் யார்? என்ற விவரங்களை நவம்பர் 7ம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்பில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மூன்றாவது தளம் தவிர்த்து மற்ற இரு தளங்களுக்கும், தரை தளத்துக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், தரைதள விதி மீறல்களை சரி செய்ய மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...