Madras high court orders october 20 plastic ban order

[10/20, 15:31] Sekarreporter 1: குடிப்போதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை….

சென்னை மகளிர் நீதிமன்றம்

சென்னை அண்ணா நகர் பகுதியில் 30 வயதான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 60 வயது முதியவரான முருகானந்தத்திற்கு சிறை

2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு

அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவு
[10/20, 17:05] Sekarreporter 1: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உறுபத்தியாளர்கள் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தீவிரம் காட்டிவருவதாகவும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 28ம் தேதி வைக்கப் போவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாற்று பொருட்கள் குறித்து பிரபலப்படுத்துவது தொடர்பான மாசுகட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது என்றும், அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன என்றும் கேள்வி எழுப்பினர்.
பதிவுசெய்யப்படாமல் செயல்படும் நிறுவனங்களுக்கு சில் வைக்க வேண்டும் என்றும், எத்தனை நிறுவனங்கள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, 180 நிறுவனங்கள் மூடப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், நிகழ்ச்சிக்கு பிறகு உயர் நீதிமன்ற வளாகம் குப்பை காடாகிவிடுவதாகவும் குறிப்பிட்டனர்.

அப்போது பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.வேல்முருகன், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி, இதுகுறித்து வழ்க்கறிஞர் பதிவுக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததுடன், முதன்முறை பட்டதாரி என்ற முறையில் பாராட்ட வருவோரும், குடும்பத்தினரும் பரிசு பொருட்களை வாங்கி வருவதால் குப்பை சேர்வதாக தெரிவித்தனர்.

வழக்கறிஞர் பதிவு செய்பவர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதிக்கக் கூடாது என பரிசீலிக்கும்படி அறிவுறுத்தினர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
[10/20, 17:40] Sekarreporter 1: மாணவர் சேர்க்கைக்கு மூன்று வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு வினாதாள்களுடன் நுழைவு தேர்வு நடத்தியது சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்று குழப்பங்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை கணிதவியல் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கணிதவியல் கழகத்தில் 116 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு கடந்த மே 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டது. ஆனால் வேறு தேர்வுகள் குறுக்கிட்டதன் காரணமாக மே23 மற்றும் ஜூன் 17 தேதிகளில் 3 வெவ்வேறு வினாதாளுடன் தேர்வு நடத்தபட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 22 ம் தேதி தேர்வு எழுதியவர்களில் 45 பேரும், 23 தேதி தேர்வு எழுதியர்களில் 45 பேரும், ஜூன் 17ம் தேதி தேர்வு எழுதியவர்களில் ஒருவர் தேர்வு செய்யபட்டனர்.

மூன்று முறைகள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு வினாதாள்கள் மூலமாக தேர்வு நடத்தியதால் தனக்கு இடம் கிடைக்க வில்லை என மதுமிதா என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஒரு படிப்பிற்கான நுழைவு தேர்வு என்பது ஒரு வினாதாள் மூலம், ஒரு முறை தான் நடத்தபட வேண்டும். வேறு தேர்வுகள் குறுக்கிடுவதாக இருந்தால், இந்த தேர்வை வேறு தேதிக்கு மாற்றி இருக்க வேண்டும், அவ்வாறு செய்யாமல் ஒரு படிப்பிற்கு 3 வினாதாள்களுடன் 3 தேர்வு நடத்தியது சட்ட விதோதமானது என தெரிவித்தார்.

இந்த தேர்வு நடைமுறையை ரத்து செய்யபட வேண்டியது தான் என்றாலும், ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்கியபிறகு இந்த நடைமுறையை ரத்து செய்வது முறையாக இருக்காது என்பதால் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்டார்.

மேலும், குழப்பமான முறையில் நுழைவு தேர்வு நடத்தியது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் தகுதியான மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்கும் வகையில் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும் என சென்னை கணிதவியல் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/20, 17:51] Sekarreporter 1: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதாக கண்டித்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறியிருந்தார்.

ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி புனிதா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.
[10/20, 17:57] Sekarreporter 1: அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கில், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கடந்த ஆகஸ்டு மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன், அவனது கூட்டாளிகள் சந்தோஷ்குமார், பாலாஜி, சக்திவேல் உள்பட பலரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த செப்டம்பர் உத்தரவு பிறப்பித்தார்.

சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ்குமாரின் மனைவி லுடியா ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்,

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
[10/21, 06:56] Sekarreporter 1: பொருளாதார குற்றங்கள் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றம் என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், 10 ஆயிரம் மோசடி தொடர்பாக சுரானா நிறுவனங்களின் முக்கிய நிர்வாகி ராகுல் தினேஷ் சுரானாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது..
.

சென்னையை தலைமையிடமாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற 4000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை.இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நால்வரும் கைது சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ராகுல் தினேஷ் சுரானா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீது நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணை நடைபெற்றது.மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மனுதாரர் நிறுவனத்தின் தொழில்நுட்பபணிகைளை கவனிக்கும் துணைத்தலைவராக மட்டுமே இருந்துள்ளார் ,இயக்குனர் குழுவில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கு பிறகு அவர் ராஜினாமா செய்துவிட்டதாகவும், பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற கடனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.பலமுறை அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும்,எங்கும் தப்பி ஓடவில்லை என்றும் குறிப்பிட்டார்.தனது தந்தை தினேஷ் சந்த் சுரானா என்பதை தாண்டி இவருக்கும் குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். தீவிர மோசடி புலனாய்வு பிரிவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது ஒரு கடுமையான பொருளாதார குற்றம் என்றும், மனுதாரர் சுரானா நிருவனங்களில் முக்கியப்பொறுப்பில் இருந்து நிறுவனத்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இதுபொதுமக்கள் சம்பந்தப்பட்ட 10 ஆயிரம் கோடி அளவிலான மோசடி என்றும் இது கடுமையான பொருளாதார குற்றம் என்றும்,சமூதாயத்திற்கு கேடு விளைவிக்ககூடிய குற்றங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் மேலும் மனுதாரர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வழக்கில் முன்கூட்டியே ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...