Madras high court sep 17 orders whats app news

[9/18, 07:02] Sekarreporter1: ஈ.பி.எஸ். தேர்வை அங்கீகரிக்கக்கூடாது – ஐகோர்ட்டில் வழக்கு

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது…..

திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

அதிமுக-வில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெயலலிதா உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஈ.பி.எஸ். தேர்வு – மனு

இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரிய வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது – மனு

அந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளரை அங்கீகரிக்கக் கூடாது – மனு

ஈ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்படும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் – மனு

சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது
[9/18, 07:02] Sekarreporter1: அரியலூர் மாவட்டத்தில் இந்து மத கோவில்களுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயம் மற்றும் கல்லறை ஆகியவற்றை அகற்றக் கோரி வழக்கு…..

2 வாரங்களில் இந்து சமய அற நிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேவாலய நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் சின்னப்பர் தேவாலயம் மற்றும் கல்லறை அமைக்கப்பட்டு, வேலி போடப்பட்டு உள்ளதாக இரட்டை பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா சுப்ரமணியன் என்பவர் வழக்கு

ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள சாலக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன், ஸ்ரீ அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 90க்கும் மேற்பட்ட ஏக்கர், இலுப்பை தோப்பில் உள்ள 3.5 ஏக்கர், இரட்டை பிள்ளையார் கோவிலின் குளத்தை ஒட்டிய 3.6 ஏக்கர் ஆகியவை ஆக்கிரமிப்பு – மனு

தங்கள் கிராமத்தில் மதம் மாறியவர்களும், பிற கிராமங்களை சேர்ந்தவர்களும் ஆக்கிரமித்துள்ளதாக மனுவில் புகார்

பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு
[9/18, 07:02] Sekarreporter1: கோவைக்கு தங்கம் கடத்திய மலேசியா தம்பதியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி….

தம்பதிக்கு எதிரான வழக்கை 6 மாதங்களில் கோவை நீதிமன்றம் முடிக்க வேண்டும்….

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மலேசியாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ. 4.58 கோடி மதிப்பிலான 4.2 கிலோ தங்கம் கடத்தியதாக மலேசியாவை சேர்ந்த அங்கேஸ்வரன், மனைவி நந்தினி ஆகியோர் வருவாய் நுண்ணறிவு துறையினரால் கைது

இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனு கோவை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

கோவை நீதமன்ற உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

பாஸ்போர்டை திரும்ப வழங்கினால் மலேசியா தப்பிக்க வாய்ப்பு – வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம்

நீதிபதி பரத சக்கரவர்த்தி
[9/18, 07:02] Sekarreporter1: உண்மை தகவல்களை மறைத்து காப்பீடு எடுத்ததாக கூறி காப்பீட்டு தொகை வழங்க மறுத்த எல்.ஐ.சி.-யின் நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் தனது தந்தை 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு காப்பீடுகள் எடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது தந்தை உடல் நலக்குறைவால் கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் காப்பீடு தொகை கோரி விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தகவல்களை மறைத்து காப்பீடு எடுத்ததால் முழுத்தொகை வழங்க முடியாது எனக்கூறி 50,000 ரூபாய் மட்டுமே வழங்குவதாக தெரிவித்ததாக மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது எல்.ஐ.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிகிச்சை பெற்ற தகவல்களை மறைத்து காப்பீடு பெற்றது தவறு எனவும் இதனால் முழு காப்பீடு தொகை வழங்க முடியாது எனக்கூறினார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தந்தை மரணத்திற்கும், விபத்துக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எல்.ஐ.சி. நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்து இரண்டு மாதங்களில் காப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்
[9/18, 07:02] Sekarreporter1: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
[9/18, 07:02] Sekarreporter1: நீதிமன்ற உத்தரவை மீறி விவசாயியின் விடு மற்றும் மாட்டு தொழுவம் இடிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

நாமக்கல் மாவட்டம், ஒட்டக்குளம்புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் வழக்கு..

களன்குத்து புறம்போக்கு நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட தனது நிலத்தை காலி செய்ய தாசில்தார் உத்தரவிடப்பட்டார்..- மனுதாரர்

நிலத்தை எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி தன்னுடைய வீடு, மாட்டுத்தொழுவம் இடிக்கப்பட்டது- மனுதாரர்.
[9/18, 07:02] Sekarreporter1: வீடு, மாட்டு தொழுவம் இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்குமாறு
நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ஒட்டக்குளம்புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,
நாமக்கல் மாவட்டம், விசானம் கிராமத்தில் களன்குத்து புறம்போக்கு நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் தனது தந்தையார் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்ததாகவும் அவர் இறந்த பிறகு தென்னை, மா உள்ளிட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தில் ஒரு வீடும், ஒரு மாட்டு தொழுவமும் இருந்து வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் நாச்சிமுத்து பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றிப் பெற்றதாகவும்
ஆனால், தேர்தலின்போது அவருக்கு எதிராக நான் செயல்பட்டதாக கருதி, தம்மை பழிவாங்கும் விதமாக வருவாய் துறை அதிகாரிகள் மூலம் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வைத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தம்முடைய இடத்துக்கு வந்த பஞ்சாயத்து தலைவர், தாசில்தார் திருமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் தம்மை கட்டாயப்படுத்தி நோட்டீஸ் கொடுத்ததாகவும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டடதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தாகவும் அவர் விசாரிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை கேட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் 2 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் எனவும் அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தம்மிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் என் வீடு, மாட்டு தொழுவம் உள்ளிட்டவைகளை இடித்ததாக கூறியுள்ளார்.

தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், தம்முடைய கோரிக்கை மனு குறித்து விளக்கம் கேட்காமலும், இவ்வாறு நடவடிக்கை எடுத்தது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது என மனுவில் கூறியுள்ளார்.

எனவே, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், தாசில்தார் திருமுருகன், வருவாய் ஆய்வாளர் சந்தோஷ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்

 

[9/16, 19:27] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE PARESH UPADHYAY AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.A.No.1470 of 2021 V.Prabhakar                                                  .. Appellant. For Appellant             : Mr.L.Chandra Kumar                                  For Respondent         : Mr.S.Haja Mohideen Gisthi JUDGMENT D.BHARATHA CHAKRAVARTHY, J. https://sekarreporter.com/the-honble-mr-justice-paresh-upadhyay-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-a-no-1470-of-2021-v-prabhakar/
[9/17, 06:46] Sekarreporter1: Mhc sept 16th order round up https://sekarreporter.com/mhc-sept-16th-ordee-round-up/
[9/17, 07:00] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.Nos.743, 1273 and 1274 of 2022 Crl.R.C.No.743 of 2022: Tekepat Satish Chandra Menon .. Petitioner            Versus Asha Panickar Uday Krishnan Menon     Rep. by his mother & natural guardian     Asha Panickar          .. Respondents Crl.R.C.Nos.1273 and 1274 of 2022: https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-nos-743-1273-and-1274-of-2022-crl-r-c-no-743-of-2022-tekepat-satish-chandra-menon-petitioner/
[9/17, 07:00] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/17/senior-adv-at-l-sundaresan-daughter-marriage-reception-tn-cm/
[9/17, 08:41] Sekarreporter1: [9/17, 08:40] Sekarreporter1: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

https://dinamalarandroidapp.page.link/hcCcq4rka1czaDMu8

Dinamalar
[9/17, 08:40] Sekarreporter1: Rmdj
[9/17, 10:03] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/17/senior-adv-at-l-sundaresan-daughter-marriage-reception-tn-cm/
[9/17, 13:56] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.Nos.1136 and 1137 of 2022     Petitioner in Tangkeswaran   .. Crl.R.C.No.1136 of 2022    Petitioner in T.Nandhini        .. Crl.R.C.No.1137 of 2022 https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-nos-1136-and-1137-of-2022-petitioner-in-tangkeswaran-crl-r-c-no-1136-of-2022-petitioner-in-t/
[9/17, 19:02] Sekarreporter1: https://youtu.be/enPIXMRNnUM
[9/17, 20:09] Sekarreporter1: A clarion call to the Academy                     Narasimhan Vijayaraghavan https://sekarreporter.com/a-clarion-call-to-the-academy-narasimhan-vijaya/
[9/17, 20:52] Sekarreporter1: Samajik Chetna Foundation Trust organised seminar on *Contribution of Periyar’s teachings in opposition of superstition and development of scientific thought in the society* at Lucknow , Gandhi bhawan Auditorium, Utter Pradesh today on the occasion of Thanthai Periyar birthday Anniversary. Mr P. Wilson Senior Advocate and Member of Parliament participated as Chief Guest and made the audience to take pledge and spoke about the contributions of Thanthai periyar https://sekarreporter.com/samajik-chetna-foundation-trust-organised-seminar-on-contribution-of-periyars-teachings-in-opposition-of-superstition-and-development-of-scientific-thought-in-the-society-at-lucknow-gandhi-bhawa/
[9/18, 07:02] Sekarreporter1: [9/18, 07:01] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/18/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-a-nos-147-and-356-of-2019-and-crl-m-p-no-7960-and-3992-of-2019-crl-a-no-147-of-2019-intelligence-officer-narcotic-control-bureau-chennai-zon/
[9/18, 07:01] Sekarreporter1: THE HON’BLE Mr.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.Nos.147 and 356 of 2019 and Crl.M.P.No.7960 and 3992 of 2019 Crl.A.No.147 of 2019: Intelligence Officer Narcotic Control Bureau Chennai Zonal Unit. For Appellant  in                           :     Mr.N.P.Kumar          Crl.A.No.147 of 2019    Special Government Pleader for NDPS Act cases For Appellant in          Crl.A.No.356 of 2019                           : Mr.G.Murugendran                                  For Respondents in                           : Mr.G.Murugendran          Crl.A.No.147 of 2019           for respondent 1 Mrs.Mamta Pandey for respondent 2                                  For Respondent in                            :    Mr.N.P.Kumar          Crl.A.No.356 of 2019    Special Government Pleader for NDPS Act cases https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-a-nos-147-and-356-of-2019-and-crl-m-p-no-7960-and-3992-of-2019-crl-a-no-147-of-2019-intelligence-officer-narcotic-control-bureau-chennai-zona/

 

 

 

You may also like...