mhc today news Feb 7

[07/02, 12:27] sekarreporter1: சென்னை நகரில் சூரப்பட்டு, போரூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிப்பது எனவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் தான் கேரேஜ்கள் உள்ளன என்பதால், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்கும் முன்பே பேருந்து நிரம்பி விடும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும் எனை குறிப்பிட்ட நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[07/02, 12:45] sekarreporter1: சென்னை மாநகர பேருந்தில் தீடீரென ஏற்பட்ட ஓட்டையில் பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் வரை இயக்கப்பட்ட பேருந்து அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருக்கையின் கீழ் இருந்த பலகை திடீரென உடைந்து விழுந்தது. அப்போது, அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண் சறுக்கி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.

விபத்தில் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்திதாள்களில் வெளியான செய்தியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காண்பித்து வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் அவசர முறையீடு செய்தார். போக்குவரத்து துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார்.

பின்னர் நீதிபதிகள், இதுகுறித்து பார்ப்பதாக (We Will See That) தெரிவித்துள்ளனர்.
[07/02, 13:13] sekarreporter1: நான்காயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகள் மூன்று பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 18 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 13  பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ்,  சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுக்கள் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் யாரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இல்லை எனவும், இந்த முறைகேடுக்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ரெட் நோட்டீஸ் அளித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மனுதாரர்கள் மூவரும் சேர்ந்து பல கோடி ரூபாயை பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளதாகவும் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் D.செல்வம், பலர் ஏமாற்றப்பட்டுள்ளதால் மூவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, மூவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி இது போன்ற நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
[07/02, 16:36] sekarreporter1: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 19வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[07/02, 16:39] sekarreporter1: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும், போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜாரானர். அப்போது அவர், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்க்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் என கூறினார். மேலும், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை எனவும் மேலும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு தீர்ப்புகளுக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும் விசாரணையை தள்ளி வைக்கக்கோரும் செந்தில் பாலாஜியின் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார்.
[07/02, 16:41] sekarreporter1: பெண் நிர்வாகியை தாக்கியதாக பதிவான வழக்கில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளின் துவக்க விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க ஆட்களை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார், அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல், மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, பொய் புகாரில் பதிவுசெய்யப்பட்ட பொய்யான வழக்கு என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு உதவியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

காவல்துறை தரப்பில், அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியவில்லை எனவும், அவர் சார்ந்த கட்சியின் பெண் நிர்வாகியே தன்னை தாக்கி தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, அமர் பிரசாத் ரெட்டிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், 10 நாள்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறை மனுதாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளார்.
[07/02, 16:57] sekarreporter1: ஒலி மாசு புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு
இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் புதிதாக 10மாடி மருத்துவமனை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமான பணியில் ஆழ்துழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்பு இருப்பதால் கட்டுமான பணிகளின் சப்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்..
நள்ளிரவையும் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதாகவும்,
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு, கட்டுமான சப்தத்தை குறைக்க கூறி கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6மணி முதல் காலை 8மணி வரை தடைவிதிக்க வைக்க வேண்டும்,
ஒலி மாசுவை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.எம்.டி.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார்கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் தரப்படவில்லை, உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிக்கை அளித்தார். இதனை பதிவு செய்தகொண்ட நீதிபதிகள் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[07/02, 17:44] sekarreporter1: https://www.youtube.com/live/xfZ32K6LuOw?si=UGScXhRvtBcvYBVn
[07/02, 17:44] sekarreporter1: நேர்மையான வழக்கறிஞர்களே பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.மணிக்குமார் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, அவருக்கு அடுத்தபடியாக நேரடியாக மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நீதிபதி வைத்தியநாதனுக்கு வழி அனுப்பு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியை துவங்கிய வைத்தியநாதன் இதுவரை 67 ஆயிரம் வழக்குகளில் விசாரித்து தீர்வு கண்டுள்ளார் என்றும், அவருடன் 74 நீதிபதிகள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்பு உரையாற்றிய நீதிபதி வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த பாரம்பரிய கட்டிடத்தில் பணியாற்றுவது முடிவுக்கு வருவது வருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நேர்மையான வழக்கறிஞர்களே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்திய நீதிபதி வைத்தியநாதன், முன்பு சமூகத்தில் வழக்கறிகளுக்கு இருந்த மதிப்பு தற்போது இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்று குறிப்பிட்டார்.

மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும், குடும்ப நலன் சார்ந்த வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
[07/02, 21:21] sekarreporter1: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நாளை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன

வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இன்று பட்டியலிடும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்த நிலையில் அவை இன்று பட்டியலிடப்படவில்லை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை நீதிபதி பரிசீலனைக்கு பிறகு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு பட்டியிடப்பட்டுள்ளதா? அல்லது ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டதால் அவர் முன்பு பட்டியலப்பட்டுள்ளதா? என்பது நாளை தெரிய வரும்

You may also like...