Ncc camp case add pp muniyaparaj பரபரப்பு வாதம்

போலி என்.சி.சி. முகாம் தொடர்பாக மேலும் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்று போலீசார் ஐகோர்ட்டில் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய விவகாரத்தில் பள்ளி முதல்வர் சதீஸ், தளாளார் சம்சுதீன் ஆகியோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதாகி சியைில் உள்ள 6 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி தனபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் முனியப்பராஜ் ஆஜராகி, கிருஷ்ணகிரி பள்ளி என்சிசி முகாம் வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்த வருகிறோம். தற்போது மேலும் இரண்டு போலி என்சிசி முகாம் பள்ளி, கல்லுாரியில் நடந்தது தொடர்பாக புலன் விசாரித்து மேலும் இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுதவரி பாலியல் தொல்லை குறித்து ஆசிரியர்கள் பள்ளி முதல்வர் ஆகியோரிடம் மாணவிகள் முன் கூட்டி புகார் கொடுத்தும். அதுபற்றி உடனே போலீசில் தகவல் தெரிவிக்காமல் வெளியில் கூற வேண்டாம் என்று மறைத்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி பெரிய குற்றமாகும்.எனவே 6 பேருக்கும் ஜாமீன் தரக்கூடாது. மேலும் இரண்டு எப்ஐஆர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 1ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

You may also like...