Nskj for acter for abudu lashmi narayanan arguedதிரைப்பட இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலையிடம் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலையிடம் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ள லீனா மணிமேகலை விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்ட்ரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனவும் எனவே வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலை தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணைய ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...