ops son election setaside


சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி தொகுதி எம்.பியுமான ஓ.பி. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவின் ஒரே ஒரு எம்.பியாக லோக்சபாவிற்கு சென்ற ஓ.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக -பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை. தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவிட்ட பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து

கடந்த ஜூன் 28ஆம் தேதி இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை பரபரப்பாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார் ரவீந்திரநாத்.

திடீர் திருப்பம்! தேனி எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது – சென்னை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்தி வைப்பு!திடீர் திருப்பம்! தேனி எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது – சென்னை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்தி வைப்பு!
அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மிலானி தனது மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை என்று கோரியிருந்தார்.ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எம்.பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சி கூண்டில் ஏறி கேள்விகளுக்கு பதிலளித்த ரவீந்தரநாத், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல் தேர்தல் அதிகாரிகள் முன் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார்.

கடந்த 3 ஆண்டு காலமாக பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து கடந்த மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Theni AIADMK MP OP Raveendranath case verdict Timeline from 2019 to 2023
தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். தனது தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார் தேனி எம்.பி ரவீந்திரநாத். தொடர்ந்து, மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.


இந்த நிலையில் இன்றைய தினம் ஜூலை 6ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தாலும்ஓ.பி.ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவு 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்து தீர்ப்பில் மாற்றமில்லை என்றால் அவரது எம்பி பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பியாக லோக்சபாவிற்கு சென்று வந்த ரவீந்திரநாத் தனது பதவியை இழக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

You may also like...