Pachiappa trust case retired judge V Parthiban appointed

பச்சையப்பன் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி திரு. ராஜா மற்றும் நீதியரசர் திரு. குமரேஷ் பாபு அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தந்த தீர்ப்பை எதிர்த்து,

வழக்கறிஞர் அன்பழகன் என்பவர் தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு (Review Application) மனுவின் விசாரணை இன்று (19.12.2023) நீதியரசர்கள் திரு. வைத்தியநாதன் மற்றும் திரு. குமரேஷ்பாபு அமர்வில் வந்தது.

அப்போது பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் திரு. கிருபாகரன், திரு. பார்த்திபன் மற்றும் திரு. பாரதிதாசன் ஆகிய மூவரின் பெயர்களை உயர்நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்து, யாரை நியமிக்கலாம் ? என்று கேட்டபோது,

பச்சையப்பன் அறக்கட்டளையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு. ஜோதிமணி,

ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. பார்த்திபன் பெயரை பரிந்துரைக்க,

அதனை ஏற்றுக்கொண்டு ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. பார்த்திபன் அவர்களை பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகியாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நியமித்தது.

கடந்த ஏழு மாத காலமாக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. எஸ். ஜெகதீசன் அவர்கள் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...