Savuku case மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 12ம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

வழக்கமான நடைமுறைப்படி சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வகையில் மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வழக்கை பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நாளை முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like...