sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1670797606614708229?t=uo3fPS_FmQpiydbgN2p5Pg&s=08 [6/20, 07:12] sekarreporter1: சென்னை, ஜூன்.20- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்கா புர்வாலா, ‘‘நான் சத்திரபதி சிவாஜியின் மண்ணில் (மராட்டியத்தில்) இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன்.

[6/20, 07:12] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1670797606614708229?t=uo3fPS_FmQpiydbgN2p5Pg&s=08
[6/20, 07:12] sekarreporter1: சென்னை, ஜூன்.20-
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ள எஸ்.வி.கங்கா புர்வாலாவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும், பார் கவுன் தலைவர் வரவேற்றார். துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, ‘‘நான் சத்திரபதி சிவாஜியின் மண்ணில் (மராட்டியத்தில்) இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன். ஆனால், தமிழ்நாடு உயர்ந்த கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும், மொழி வளமைக்கும் மட்டும் புகழ் பெற்றது இல்லை. நீதி பரிபாலனத்துக்கும் பெயர் பெற்றது. இதற்கு உதாரணமாக சிலப்பதிகாரமும், மனுநீதி சோழன். சிபி சக்கரவர்த்தியும் உதாரணமாக திகழ்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு, காகிதம் இல்லாத நீதிபரிபாலனத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து ஆன்லைன் வாயிலாக மனுக்களை தாக்கல் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். இருந்தாலும், இது காகிதம் இல்லா நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம்’’ என்று பேசினார்.
…………….

You may also like...