sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1693294714731319625?t=uH6Z6qyah-QYMXFTim9baw&s=08 [8/20, 21:42] sekarreporter1: [8/20, 21:40] sekarreporter1: லம்: ”சட்டம் சார்ந்த அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே சிறந்த வக்கீலாக உருவாக முடியும்,” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.சேலம் மாவட்ட நீதிமன்றம், வக்கீல் சங்கம் சார்பில் இளம் வக்கீல்களுக்கு சட்ட கருத்தரங்கம் நேற்று நடந்தது.

[8/20, 21:41] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1693294714731319625?t=uH6Z6qyah-QYMXFTim9baw&s=08
[8/20, 21:42] sekarreporter1: [8/20, 21:40] sekarreporter1: லம்: ”சட்டம் சார்ந்த அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே சிறந்த வக்கீலாக உருவாக முடியும்,” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.சேலம் மாவட்ட நீதிமன்றம், வக்கீல் சங்கம் சார்பில் இளம் வக்கீல்களுக்கு சட்ட கருத்தரங்கம் நேற்று நடந்தது.
[8/20, 21:40] sekarreporter1: சங்க தலைவர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முன்னிலை வகித்தார்.அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது:நம் நாட்டில், 2,000 ஆண்டுகளுக்கு முன், சட்டம், நீதி சார்ந்த பல்வேறு விஷயங்களை எப்படி அணுக வேண்டும் என, இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சட்டம் சார்ந்த அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே, சிறந்த வக்கீலாக உருவாக முடியும். இளம் வக்கீல்கள், அறிவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

வக்கீல் தொழில் மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை கையாளும் விதம், அதில் உங்கள் பங்களிப்பு உள்ளிட்டவற்றில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் அறிவு, உங்களை கைவிடாது. இளம் வக்கீல்கள் இதை மறந்துவிடக்கூடாது.சட்டம் சார்ந்த இலக்கியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் இளம் வக்கீல்களுக்கு நீதிமன்ற பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதையும் அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, சுந்தர், தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

You may also like...