sekarreporter1: Justices R. Mahadevan and P.D. Audikesavalu say no order can be passed for conducting the Brahmotsavam between May 20 and 29 due to a legal impediment நீதிபதிகள் அதிரடி கேள்வி

[11/05, 08:25] sekarreporter1: Justices R. Mahadevan and P.D. Audikesavalu say no order can be passed for conducting the Brahmotsavam between May 20 and 29 due to a legal impediment: Justices R. Mahadevan and P.D. Audikesavalu say no order can be passed for conducting the Brahmotsavam between May 20 and 29 due to a legal impediment
[11/05, 08:25] sekarreporter1: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்த ராதாகிரஷ்ணன் தரப்பில், பத்தாம் நூற்றாண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கடைசியாக 1849 ம் ஆண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின், சைவ – வைணவ பிரிவினர் மோதல்கள் காரணமாகவும், தீட்சிதர்களின் எதிர்ப்பு காரணமாகவும் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை வாதிடப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கடந்த 1920 ம் ஆண்டு நுழைவாயில்களை திறப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிரம்மோற்சவம் குறித்து குறிப்பிடாததால், கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது. பிரம்மோற்சவம் நடத்துவது மரபு விழாவா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை கொண்டு வர அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், 400 ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவம் இப்போது நடத்தப்படவேண்டும். உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கூறி, பிரம்மோற்சவம் நடத்த அனுமதியளித்து, அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்தக் கோரியுள்ளனர் தெரிவிக்கப்பட்டது.

தீட்சிதர்கள் தரப்பில், மரபு விழாக்களாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மரபு, சட்ட விதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதன் மூலம்,இந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மோற்சவ விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது

You may also like...