Sethu Sir Dinamalar: நல்லோர் பெருகட்டும்! * அக்னியில் குளித்ததுபோல், கடந்த இரண்டரை மாதங்களாக தகிப்பு. வெகு தூரத்தில் வெப்பம் கக்கிய சூரியன், சென்னைக்கு அருகில், கொஞ்சம் நெருங்கி விட்டதோ என்ற தவிப்பு.

[6/12, 02:48] Sethu Sir Dinamalar: நல்லோர் பெருகட்டும்!
*
அக்னியில் குளித்ததுபோல், கடந்த இரண்டரை மாதங்களாக தகிப்பு.

வெகு தூரத்தில் வெப்பம் கக்கிய சூரியன், சென்னைக்கு அருகில், கொஞ்சம் நெருங்கி விட்டதோ என்ற தவிப்பு.

கான்கிரீட் கட்டிடக் காடுகள் நிறைந்த தலைநகரம், புழுக்கம் தீராமல் தவித்தது.

ஏதோ இரக்கப்பட்டு, எழும்பூரில் கொஞ்சமும், மேற்கு மாம்பலத்தில் கொஞ்சமுமாக, சில நிமிடங்கள், வாசல் தெளித்து விட்டு போனது மழை.

அரபிக் கடலில் பயணித்த புயலுக்கு பின்னே மேகங்கள் பின் தொடர்ந்ததால், குளிர் காற்று சென்னை தொடவில்லை.

வானம் கருவுற்று, மேகப் புயல்கள் பிறந்ததால், கேரளாவை குளிப்பாட்டும், தென்மேற்குப் பருவ மழைகூட தாமதம் என்றார்கள்.

குளிர்சாதனம் வாங்க வசதியில்லாத, நிழலில் ஒதுங்கி வாழ நேரமில்லாத, வெயிலோடும், உயிரோடும், போராடும் ஏழை தொழிலாளர்களின் ஏக்கம் தீர, குளிர் காற்று வீசாதா, வான் மழை வாராதா என்று ஏங்கியது மனம்.

“சந்தையில் வாங்கி வந்த பூக்களை, சரம் தொடுக்க முடியலைங்க. ஒரே மயக்கம் … ” என்று சொல்லி, உதிரியாகவே விற்றுச் சென்றார் வியர்வையில் குளித்த பூக்காரப் பெண்.

இயற்கைக்கு ஏன் இந்த கோபம்?.

மனம் கொதித்து கிடந்த ஓர் நாளில், அந்த ஏழையின் ஏக்கக் குரல், வருணன் காதில் விழுந்தது போலும்.

அன்று அதிகாலையில், தென்கிழக்கில் இருந்து குபீரென வீசியது இளங்காற்று.

பகல் பொழுது வரை, வெப்பம் சுமக்காத, மெல்லிய பூங்காற்று, இல்லம் புகுந்து இதயம் மகிழ்விக்கிறது.

காற்றின் வருகையால், கதவின் தாவணி, அசைந்தாடி மகிழ்வதை, நிலையின் அருகில் அமர்ந்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.

உழைப்பாளிகளை உயிர்பிக்க மாமழையை அழைத்து வா பூங்காற்றே – வேண்டிக்கொள்கிறேன்.

வானம் பொழிந்து, பூமி சிரித்தால், பசி ஏது, பஞ்சம் ஏது?

வயலெல்லாம் பொன் ஆகி, எல்லா உயிர்களின் வயிறும் நிறைந்தால், வள்ளல்களுக்கு வேலை இல்லை.

நல்லோர் பொருட்டு பெய்யும் மழையால், நாட்டில் நல்லோர் பெருகட்டும்!

#மாமழை
[6/12, 07:21] sekarreporter1: super sir

You may also like...